Financial Aid To Deceased Family தூத்துக்குடி அருகே விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நிதியுதவி
Financial Aid To Deceased Family
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், சேர்ந்தமங்கலம் கிராமம் கிறிஸ்துவின் பாசறை சபை அருகில் கடந்த 31.10.2023 அன்று இரவு இரண்டு இருசக்கர வாகனங்கள் எதிர்பாராதவிதமாக நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் புன்னக்காயல் மீனவ கிராமத்தைச் சேர்ந்த லசிங்டன் (வயது 35) மற்றும் அலெக்ஸ்சாண்டர் (வயது 34) ஆகிய இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர்.
மேலும், வசந்தன் ப்ரீஸ் (வயது 33) என்பவர் ஆத்தூர் தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மூளைச்சாவு அடைந்தார். மேலும், மூளைச்சாவு அடைந்த வசந்தன் ப்ரீஸ் என்பவரின் உடல் உறுப்புகள் குடும்ப உறுப்பினர்களால் தானம் செய்ய முன்வந்ததன் அடிப்படையில் 6.11.2023 அன்று உடல் உறுப்புகள் தானம் வழங்கப்பட்டது. இதையடுத்து அவரது உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிசடங்கு செய்யப்பட்டது.
Financial Aid To Deceased Family
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு லட்சம் ரூபாயும், காயமடைந்த நபருக்கு ஒரு லட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.
அதன் அடிப்படையில், உயிரிழந்த புன்னக்காயல் கிராமத்தைச் சேர்ந்த வசந்தன் ப்ரீஸ், அலேச்சாண்டர், லசிங்டன் ஆகியோர் இல்லங்களுக்கு சென்று அவர்களின் குடும்பத்தினரிடம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா இரண்டு லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி வழங்கினார்.
மேலும், ஆத்தூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ராஜன் என்பவருக்கும் ரூ. 1 லட்சத்திற்கான காசோலையினையும் கனிமொழி எம்.பி. வழங்கினார். அப்போது, மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி ஆகியோர் உடன் இருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu