Filter Coffee Stall Tahdco LOAN தூத்துக்குடி மாவட்டத்தில் பில்டர் காபி நிலையம் அமைக்க தாட்கோ மூலம் கடனுதவி

Filter Coffee Stall Tahdco LOAN  தூத்துக்குடி மாவட்டத்தில் பில்டர் காபி நிலையம் அமைக்க தாட்கோ மூலம் கடனுதவி
X
Filter Coffee Stall Tahdco LOAN தாட்கோ மூலமாக ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர் சார்ந்தவர்கள் பில்டர் காபி நிலையம் அமைத்திட மானியத்துடன் கூடிய கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Filter Coffee Stall Tahdco LOAN

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் என அழைக்கப்படும் தாட்கோ மூலமாக, தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர்கள் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திட புதியதாக தொழில் தொடங்குவதற்கு ஏதுவாக பில்டர் காபி நிலையம் அமைத்திட மானியத்துடன் கூடிய கடனுதவி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் என அழைக்கப்படும் தாட்கோ மூலமாக, தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர்கள் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திட புதியதாக தொழில் தொடங்குவதற்கு ஏதுவாக பில்டர் காபி நிலையம் அமைத்திட மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்படுகிறது.

இந்தத் தொழிலை தொடங்க காலிஇடமோ அல்லது கட்டிடங்கள் வைத்திருப்பவர்களுக்கு பில்டர் காபி நிலையம் அமைக்கவும், தொழில் முனைவோர்கள் அல்லது அவர்களின் ஊழியர்களுக்கு தேவையான பயிற்சியும் உரிமையாளர் கட்டணம் 2 லட்சம் ரூபாய் முற்றிலுமாக விலக்கும், விற்பனை செய்ய வாங்கும் பொருட்களுக்கு 5 சதவீதம் வரை சிறப்பு தள்ளுபடியும் பில்டர் காபி நிறுவனத்தின் மூலம் அளிக்கப்படும் மேலும் மாதாந்திர பில்லிங் மென்பொருள் கட்டணம் விலக்கு அளிக்கப்படும். இத்தொழிலினை செய்ய திட்ட அறிக்கை தயார் செய்ய இலவச ஆலோசனைகள் அந்நிறுவனத்தின் மூலம் அளிக்கப்படும்.

18 முதல் 40 வயதுக்குட்பட்ட ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர்கள் தாட்கோ மூலம் மானியத்துடன் கூடிய கடனுதவி பெற புகைப்படம் மற்றும் குறிப்பிட்ட சான்றுகளுடன் www.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இத்தொழிலுக்கு ரூ.6.50 இலட்சம் முதல் ரூ.7.50 இலட்சம் வரை திட்டத்தொகையினை நிர்ணயித்து இதற்குரிய மானியமாக ஆதிதிராவிடர்களுக்கு 30சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.2.25 இலட்சம் எனவும் பழங்குடியினருக்கு 50சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.3.75 இலட்சம் வரை வழங்கப்படும். பயனாளி 5சதவீதம் முதல் 10சதவீதம் சொந்த முதலீடு வங்கியில் செலுத்தி எஞ்சிய தொகை வங்கி கடனுதவி பெற்றுக் கொள்ளலாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!