மத்திய, மாநில அரசு மானியங்களை பெற ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ல்’ வங்கியில் வசதி

மத்திய, மாநில அரசு மானியங்களை பெற ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ல்’ வங்கியில் வசதி
X

மத்திய, மாநில அரசு மானியங்களை பெற ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ல்’ வங்கியில் வசதி செய்யப்பட்டுள்ளது.  

மத்திய, மாநில அரசுகளின் அனைத்து நேரடி மானியங்கள் மற்றும் மகளிர் உரிமைத்தொகை பெறும் பயனாளிகள் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி மூலம் பணம் பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியா போஸ்ட் பேமெணட்ஸ் வங்கியின் சேவை குறித்து தூத்துக்குடி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் பொன்னையா வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:

இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி, அஞ்சல்துறையின் கீழ் இயங்கும் இந்திய அரசுக்கு சொந்தமான வங்கி ஆகும். இந்த வங்கி கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் செயல்பட்டு பொது மக்களுக்கு வங்கி சேவை அளித்து வருகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தின் பொதுமக்கள் அனைவரும் மாவட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் இயங்கிவரும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியை அணுகி மாநில அரசின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகையை பெற்றுக்கொள்ள இயலும். மேலும் தங்கள் பகுதிக்கு வரும் தபால்காரர் மூலமும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகையை பெறும் வசதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், நூறுநாள் வேலைத்திட்ட பயனாளிகளின் சம்பள கணக்கு, விவசாயிகள் மத்திய அரசின் பிஎம் கிசான் மானியம், குடும்ப அட்டைதாரர்களின் நேரடி மானியங்கள், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பள்ளி கல்லூரிமாணவர்களுக்கான ஆதிதிராவிட நலவாரிய உதவித்தொகை, தொழிலாளர் நலவாரிய உதவித்தொகை, மீனவர்கள் மீன்பிடி தடைக்கல மானியம், சமூக பாதுகாப்பு திட்டபயனாளிகளின் மானியம், பள்ளி மற்றும் கல்லூரிமாணவர்களின் ஊக்கத்தொகை, கர்ப்பிணி பெண்களின் கர்ப்பகால உதவித்தொகை, சமையல் கியாஸ் மானியம், தொழிலாளர் நலவாரிய உதவித்தொகை, பசுமை வீடு திட்டத்தில் வீடு கட்ட அரசு தரும் மானியம் உள்ளிட்ட அனைத்து திட்டபயனாளிகளும் அனைத்து அஞ்சலகங்களிலும் தங்களது பணத்தை எடுத்துக் கொள்ளலாம். மேலும் தபால்காரர் மூலம் தங்கள் இல்லத்திற்கு வந்து அவர்களது வங்கி கணக்கில் உள்ள பணத்தை பெற்றுக் கொள்ள முடியும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் அனைவரும் மாவட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் இயங்கிவரும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியை அனுகி மாநில அரசின் கலைஞர்மகளிர் உரிமைத்தொகை மற்றும் நேரடி மானிய தொகையை பெற்று பயன்பெறலாம் என தூத்துக்குடி அஞ்சல் கோட்டத்தின் கோட்ட கண்காணிப்பாளர் பொன்னையா தெரிவித்துள்ளார்.

Next Story
ai solutions for small business