அமலாக்கத்துறையின் அடுத்த லிஸ்ட்.. சசிகலா புஷ்பா வெளியிட்ட ட்விஸ்ட்

அமலாக்கத்துறையின் அடுத்த லிஸ்ட்.. சசிகலா புஷ்பா வெளியிட்ட ட்விஸ்ட்
X

தூத்துக்குடியில் பாஜக மாநில துணைத் தலைவர் சசிகலா புஷ்பா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

தூத்துக்குடி மாவட்ட தி.மு.க. அமைச்சர்கள், எம்.பி. மீது கூட அமலாக்கத்துறை சோதனை நடைபெற வாய்ப்பு உள்ளதாக சசிகலா புஷ்பா தெரிவித்தார்.

அ.தி.மு.க.வில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட சசிகலா புஷ்பா பின்னர் பா.ஜ.க.வில் இணைந்தார். பா.ஜ.க.வில் மாநில துணைத் தலைவராக உள்ள அவர் இன்று தூத்துக்குடியில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் தெற்கு மாவட்ட அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது சசிகலா புஷ்பா கூறியதாவது:-

தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் தர மாட்டோம் என்றும் மேகதாது அணைகட்டியே தீருவோம் என்று கூறிவரும் கர்நாடக துணை முதலமைச்சர் சிவகுமார் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்ற கூட்டத்திற்கு கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு தமிழக முதல்வர் சென்றது தமிழக மக்களுக்கு இழைக்கப்படும் துரோகம் ஆகும். இந்தக் கூட்டத்தில் தமிழக முதல்வர் தமிழக மக்களுக்காக எதிர்ப்பு தெரிவித்து இருக்க வேண்டும்.

பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை ஏற்கெனவே தி.மு.க. தலைவர்களின் ஊழல் பட்டியலை வெளியிட்டுள்ளார் அடுத்ததாக நடைபயணம் மேற்கொள்ளும் போது கிராமம் கிராமமாக பட்டி தொட்டி எங்கும் தி.மு.க.வினர் செய்துள்ள ஊழலை பிரச்சாரமாக எடுத்து வைக்க உள்ளார்.

பல்வேறு ஊழல் செய்ததன் காரணமாக அமலாக்கத்துறை சோதனை நடைபெறுகிறது. இதில் அரசியல் பழி வாங்கும் நடவடிக்கை எதுவும் கிடையாது. இந்த அமலாக்கத்துறை சோதனை தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தி.மு.க. அமைச்சர்கள் மற்றும் தி.மு.க. எம்பி ஆகியோர் மீது கூட விரைவில் இருக்கலாம். முட்டை வழங்குவதில் ஊழல், சத்துணவு ஊழியர் நியமனத்தில் ஊழல் போன்ற ஊழல் காரணமாக இது நடைபெறும் என பாஜக மாநில துணைத் தலைவர் சசிகலா புஷ்பா தெரிவித்தார்.

பேட்டியின்போது, பாஜக தெற்கு மாவட்டத் தலைவர் சித்ராங்கன், மாநில நிர்வாகி உமரி சத்தியசீலன் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags

Next Story
வருச கணக்கில் குழந்தை இல்லையா...? இந்த பழத்தை சாப்பிட்டு பாருங்க...! அவ்ளோ பயன்...!