தூத்துக்குடி மாநகரில் நாளை மின் விநியோகம் நிறுத்தம்
நாளை மின்தடை அறிவிப்பு (கோப்பு படம்)
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தூத்துக்குடி மின் பகிர்மான வட்ட நகர துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (16.12.23) சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது.
இதன் காரணமாக தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட போல்பேட்டை, ஆண்டாள் தெரு, சத்திரம் தெரு, 1 ஆம் ரயில்வே கேட், 2 ஆம் ரயில்வே கேட், மட்டக்கடை, வடக்குபீச் ரோடு, ரயில்வே ஸ்டேஷன் ரோடு, வடக்கு காட்டன்ரோடு, கிப்சன் புரம், ரங்கநாதபுரம், தெப்பக்குளம் தெரு, சிவன் கோவில் தெரு, டி ஆர் நாயுடு தெரு, வ.உ.சி. ரோடு,ஜெயிலானி தெரு ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது.
இதேபோல, வி.இ.ரோடு, பங்களா தெரு, பால விநாயகர் கோவில் தெரு, டூவிபுரம், ஜெயராஜ் ரோடு, மீனாட்சிபுரம், தாமோதர நகர், சண்முகபுரம், ஜின் பேக்டரி ரோடு, எட்டயபுரம் ரோடு, ஸ்டேட் வங்கி காலனி, கந்தசாமிபுரம், இஞ்ஞாசியார் புரம், எழில் நகர், அழகேசபுரம், திரவிய புரம், முத்துகிருஷ்ணா புரம், குறிஞ்சிநகர், அண்ணாநகர், வி.வி.டி. மெயின் ரோடு, முனியசாமிபுரம், CGE காலனி, லெவிஞ்சிபுரம், பக்கிள்புரம், லோகியா நகர், பெருமாள் புரம், போல்டன்புரம், சுப்பையாபுரம், பாளையங்கோட்டை ரோடு, சிதம்பரநகர், பிரையண்ட்நகர், தனசேகரன் நகர், முத்தம்மாள் காலனி, கே.டி.சி.நகர், ஹவுசிங் போர்டு காலனி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளிலும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தூத்துக்குடி செயற்பொறியாளர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu