தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள்: பார்வையாளர் ஆய்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள்: பார்வையாளர் ஆய்வு
X

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெற்ற முகாமில் வாக்காளர் பட்டியல் பார்வையாளரும், வீட்டு வசதி வாரிய மேலாண்மை இயக்குநருமான சரவணவேல்ராஜ் ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தப் பணிகள் குறித்து வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்திய தேர்தல் ஆணையத்தால் நியமனம் செய்யப்பட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளரும், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய மேலாண்மை இயக்குநருமான சரவணவேல்ராஜ் தலைமை வகித்தார். மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான லட்சுமிபதி முன்னிலை வகித்தார்.

கூட்டத்தின்போது, வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தப் பணியில் மேற்கொள்ளப்படும் நடைமுறை குறித்து வாக்காளர் பட்டியல் பார்வையாளர் மற்றும் மாவட்ட ஆட்சியரால் எடுத்துரைக்கப்பட்டு, அரசியல் கட்சி பிரதிநிதிகளின் ஆலோசனை மற்றும் கருத்துக்கள் கேட்கப்பட்டது.

அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்வைத்த கோரிக்கைகளை பரிசீலனை செய்து, முடிவு செய்திட, வாக்காளர் பட்டியல் பார்வையாளரால் அறிவுறுத்தப்பட்டு, மாவட்டத்தில் உள்ள அனைத்து தகுதியான வாக்காளர் பெயர்களையும் மற்றும் இளம் வாக்காளர்களையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க அறிவுறுத்தப்பட்டது.


மேலும், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கவும், வாக்காளர் பட்டியலில் உள்ள இரட்டைப் பதிவு, இறந்த நபர்களின் பதிவு மற்றும் இடம்பெயர்ந்த நபர்களின் பதிவுகளை நீக்கம் செய்து ஆரோக்கியமான வாக்காளர் பட்டியல் வெளியிட அரசியல் கட்சி பிரதிநிதிகளிடம் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

ஆய்வுக் கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன் மற்றும் அங்கீகரிப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

முன்னதாக, தூத்துக்குடி புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்த பார்வையாள சரவணவேல்ராஜ், அங்கு நடைபெற்ற சிறப்பு முகாமையும் பார்வையிட்டார்.

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!