அதிமுக மாநாட்டை கெடுக்கும் நோக்கில் திமுக உண்ணாவிரதப் போராட்டம்; முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு

அதிமுக மாநாட்டை கெடுக்கும் நோக்கில் திமுக உண்ணாவிரதப் போராட்டம்; முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு
X

தூத்துக்குடியில் அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அதிமுக பொன்விழா மாநாட்டை கெடுப்பதகாகவே திமுக உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்துள்ளது என, அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் குற்றம்சாட்டியுள்ளார்.

மதுரையில், ஆகஸ்ட் 20 ஆம் தேதி அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு நடத்த ஏற்ப்பாடு செய்யபட்டு வருகிறது. இதனை முன்னிட்டு தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் பொதுமக்களுக்கு பொன்விழா மாநாடு அழைப்பிதழ் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சரும், தெற்கு மாவட்டச் செயலாளருமான சண்முகநாதன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அழைப்பிதழை வழங்கினார்.

தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மதுரையில் 20 ஆம் தேதி நடைபெறும் அதிமுகவின் பொன்விழா எழுச்சி மாநாடு வெற்றி பெற கூடாது என்பதற்காக திமுக, நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி மாவட்டம் தோறும் உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்துள்ளனர். நீட் தேர்வு கொண்டு வந்த போது அதை ஆதரித்தது திமுக தான். மேலும் நீட் வேண்டும் என்று உச்சநீதி மன்றத்தில் வாதாடியது திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம்தான்.

உதயநிதி, தாங்கள் வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் அந்த மந்திரம் எனது தந்தை ஸ்டாலினுக்கு தெரியும், என்றார். ஆனால் இன்று வரை அதை செய்யவில்லை. முடியாத ஒன்றை தமிழக மக்களை ஏமாற்ற வேண்டும் என்ற காரணத்தினால் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்தனர். தமிழகத்தில் இன்று ஸ்டாலின் போலியான ஆட்சி நடத்தி வருகிறார்.

தமிழகத்தில் நடைபெறும் ஆட்சியை, தமிழ்நாடு மாடல் என்றுதான் சொல்ல வேண்டும். அதைவிடுத்து திராவிட மாடல் என்று சொல்ல கூடாது. அது தவறு. இன்று இந்தியா என்று சொல்ல துவங்கியுள்ளனர். மேலும் அதிமுகவினர் நடத்தும் பொன்விழா மாநாடு பற்றி செய்திகள் வரக்கூடாது என்றும் பொதுமக்களுக்கு தெரிய கூடாது என்ற கெட்ட எண்ணத்தில்தான் அதே நாளில் நீட் தேர்வு ரத்து என்ற கோரிக்கையை வலியுறுத்தி மாவட்டம் தோறும் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என திமுக அறிவித்துள்ளது. இது போன்ற ஆட்சி தமிழகத்தில் இனி இருக்க கூடாது என்று, முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் தெரிவித்தார்.

Next Story
மனித உணர்வுகளை புரிந்து கொள்ளும் AI பற்றி நீங்களும்  தெரிந்து கொள்ளுங்கள்!