முன்னாள் திமுக நகர செயலாளர் கொலை முயற்சி வழக்கு: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விடுதலை
தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆஜராகினார்.
தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர், திமுக நகர செயலாளராக கடந்த 2011 ஆம் ஆன்டு இருந்தார். திமுக நகர செயலாளர் சுரேஷுக்கும், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கும் கடந்த 2011 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது தகராறு ஏற்பட்டது.
இந்த முன்விரோதம் காரணமாகவும், திமுகவில் இரண்டு கோஷ்டிகளாக செயல்படும் நிலை ஏற்பட்டது. இந்த நிலையில், கடந்த 2011 ஆம் ஆண்டு பல்வேறு பகுதிகளில் திமுக நகர செயலாளாரக இருந்த சுரேஷின் காரை வழிமறித்து தாக்குதல் நடத்தி கொலை முயற்சியில் ஈடுபட்ட வழக்கு, அவரது அலுவலகம் மீது நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கு, மேலும் பெட்ரோல் குண்டு வீசிய வழக்குகள் உள்ளிட்ட மூன்று வழக்குகள் ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ராதாகிருஷ்ணன், பாலகிருஷ்ணன், கோபி, உதயகுமார் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருந்தது. இந்த வழக்கின் விசாரணைகள் முடிவுற்று இன்று தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 5 பேரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகினார்.
அப்போது, இந்த வழக்கில் குற்றச்சாட்டை உரிய முறையில் அரசு தரப்பு நிரூபிக்காததால் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட ஐந்து பேரை விடுதலை செய்து தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி குருமூர்த்தி தீர்ப்பளித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu