தீபாவளி பாதுகாப்பு ஏற்பாடுகள்: தூத்துக்குடியில் எஸ்.பி. நேரில் ஆய்வு
தூத்துக்குடியில் போலீசாரின் பாதுகாப்பு பணிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தீபாவளி திருநாளில் சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிர்க்கும் பொருட்டு தமிழக அரசு தீபாவளி நாளில் காலை 6 மணி முதல் 7 மணி வரையும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையும் மட்டுமே காலையில் 1 மணி நேரமும், மாலையில் 1 மணி நேரமும் பட்;டாசு வெடிக்க உத்தரவிட்டுள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவுப்படி சுற்றுச்சூழலுக்கு கேடு இல்லாத பசுமை பட்டாசுகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
இதற்கிடையே, தீபாவளி பண்டிகையின்போது வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் செல்லும் பொதுமக்கள் அவரவர் பகுதியில் உள்ள காவல் நிலையங்களில் தகவல் தெரிவித்துவிட்டுச் சென்றால், அந்தப்பகுதிக்கு காவலர் அதிக அளவில் ரோந்து சென்று கவனிப்பார்கள் என தூத்துக்குடி மாவட்டக் காவல் துறை அறிவித்துள்ளது.
மேலும் பொது இடங்களில் மது அருந்திவிட்டு பொதுமக்களுக்கு இடையூறு விளைவிப்பவர்கள், குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள், இரு சக்கர வாகன வேகப்பந்தயம் வைத்து செல்லுதல் (Bike Race) பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வாகனங்களில் அதிக ஒலி எழுப்பி அதிக வேகத்தில் செல்வது, போதைப்பொருள் கடத்தல், விற்பனை போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தீபாவளி திருநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் 2 காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் சுமார் 800 போலீசார் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் உட்பட மாவட்டத்தின் முக்கிய பகுதிகளிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் இன்று போலீசாரின் பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்து அறிவுரைகள் வழங்கினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu