தூத்துக்குடி ஆயுதப்படை பிரிவில் காவல் கண்காணிப்பாளர் திடீர் ஆய்வு

தூத்துக்குடி ஆயுதப்படை பிரிவில் காவல் கண்காணிப்பாளர் திடீர் ஆய்வு
X

தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை பிரிவில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை பிரிவில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் மாதம்தோறும் காவல் நிலையங்களுக்கு நேரடியாக செய்து திடீரென சென்று ஆய்வு மேற்கொள்வது வழக்கம். மேலும், இந்த ஆய்வின்போது, காவல் நிலையங்களில் பணிபுரியம் காவலர்களிடம் குறைகளை கேட்டறிந்து அது குறித்து நடவடிக்கை மேற்கொள்வதும் உண்டு.

அந்த வகையில், தூத்துக்குடி மில்லர்புரத்தில் உள்ள தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படைப் பிரிவில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் திடீர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போதுது, மாவட்ட ஆயுதப்படையில் பராமரிக்கப்படும் பதிவேடுகளை பார்வையிட்டு சரியான முறையில் பராமரிக்கப்படுகிறதா? எனவும் ஆய்வு மேற்கொண்டு ஆயுதப்படை காவல்துறையினரின் குறைகளை கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின்போது தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் புருஷோத்தமன், ஆயுதப்படை காவல் ஆய்வாளர் சுனைமுருகன், உதவி ஆய்வாளர்கள் வெங்கடேசன், பிரம்மநாயகம், கௌசல்யா ஆகியோர் உடனிருந்தனர்.

இதேபோல, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ஸ்ரீவைகுண்டம் மற்றும் செய்துங்கநல்லூர் ஆகிய காவல் நிலையங்களுக்கு நேரில் சென்று அங்கு பராமரிக்கப்படும் ஆவணங்கள் மற்றும் முக்கிய வழக்கு கோப்புகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், அந்தந்த காவல் நிலையங்களில் பணிபுரியம் போலீசாருக்கு அவர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் காவல் நிலையங்களுக்கு புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும் காவல் கண்காணிப்பாளர் அறிவுரைகள் வழங்கினார்.

இந்த ஆய்வின்போது ஸ்ரீவைகுண்டம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மாயவன், ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய ஆய்வாளர் அன்னராஜ், செய்துங்கநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் பத்மநாபபிள்ளை மற்றும் உதவி ஆய்வாளர்கள் உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!