தூத்துக்குடி நாகலாபுரம், வேப்பலோடை ஐடிஐ-களில் நேரடி மாணவர் சேர்க்கை
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ். (கோப்பு படம்).
தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் நாகலாபுரம் மற்றும் வேப்பலோடை அரசு ஐடிஐ-களில் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை நேரடி மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:
நாகலாபுரம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான சேர்க்கையானது 23.09.2023 வரை நடைபெற்று வந்தது. தற்போது காலியாக உள்ள தொழிற்பிரிவிற்கு 30.09.2023 வரை நேரடி சேர்க்கை செய்திட கால நீட்டிப்பு வழங்கப்பட்டு உள்ளது.
அதன்படி, தொழில்துறை ரோபோடிக்ஸ் மற்றும் டிஜிட்டல் உற்பத்தி தொழில்நுட்ப வல்லுநர் பிரிவில் 5 காலி இடங்களும், உற்பத்தி செயல்முறை கட்டுப்பாடு மற்றும் ஆட்டோமேஷன் பிரிவில் 10 காலி இடங்களும் என மொத்தம் 15 காலி இடங்கள் உள்ளன.
இதேபோல, வேப்பலோடை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தொழில்துறை ரோபோடிக்ஸ் மற்றும் டிஜிட்டல் உற்பத்தி தொழில்நுட்ப வல்லுநர் பிரிவில் 14 காலி இடங்களும், உற்பத்தி செயல் முறை கட்டுப்பாடு மற்றும் ஆட்டோமேஷன் பிரிவில் 7 காலி இடங்களும், Advanced CNC Technician பிரிவில் 3 காலி இடங்களும் என மொத்தம் 24 காலியிடங்கள் உள்ளன.
இந்த படிப்புகளில் சேர விரும்புவோர் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், பாஸ்போட் சைஸ் போட்டோ, ஆதார் கார்டு மற்றும் அசல் சான்றிதழ்களில் நகல்கள் கொண்டு வந்து நாகலாபுரம் மற்றும் வேப்பலோடை அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரில் வந்து விண்ணப்பிக்கலாம்.
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசால் மாதம்தோறும் உதவித் ;தொகை ரூ.750-ம், கட்டணமில்லா பேருந்து சலுகை, விலையில்லா மிதிவண்டி, விலையில்லா பாடப் புத்தகங்கள் மற்றும் வரைபடக் கருவிகள், விலையில்லா சீருடை, விலையில்லா காலணி, பயிற்சிக்கு தேவையான நுகர் பொருட்கள், அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவிகளுக்கு புதுமைப்பெண் தி;ட்டத்தின் கீழ் மாதம் ரூ. 1000 ஆகியவை வழங்கப்படும்.
இதுதொடர்பான மேலும் விவரங்களுக்கு வேப்பலோடை, தொழிற்பயிற்சி நிலைய முதல்வரை 8511154977 என்ற கைபேசி எண்ணிலும், நாகலாபுரம் தொழிற்பயிற்சி நிலைய முதல்வரை 9245145255 என்ற கைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu