தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் டிச. 5ம் தேதி காலபைரவருக்கு லட்சார்ச்சனை
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் டிச. 5ம் தேதி காலபைரவருக்கு லட்சார்ச்சனை நடந்தது.
தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகர் ஸ்ரீசித்தர் பீடத்தில் 11 அடி உயரத்தில் ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி-மஹா காலபைரவர் மற்றும் விநாயகர், குருமகாலிங்கேஸ்வரர், மங்களம் தரும் சனீஸ்வரர், ஆஞ்சநேயர், வாராஹி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.
ஸ்ரீசித்தர் பீடத்தில் டிசம்பர் 5 ம் தேதி (செவ்வாய்கிழமை) காலபைரவரின் பிறந்த தினமான ''மஹாதேவ காலபைரவாஷ்டமி''யை முன்னிட்டு சிறப்பு மஹா யாக வழிபாடுகள் சுவாமி ''சாக்தஸ்ரீ'' சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் கோலாகலமாக நடைபெற உள்ளது.
இதுகுறித்து சிறப்பு வழிபாடுகள் குறித்து சீனிவாச சித்தர் கூறியதாவது:
காலபைரவர் பிறந்த தினமான மஹாதேவ காலபைரவாஷ்டமி அன்று அவரை மனம் உருக வணங்கினால் வேண்டும் வரங்கள் யாவும் கிடைத்திடும், வாழ்வில் கடன் தொல்லைகள் யாவும் நீங்கி செல்வங்கள் பெருகிடும், தொழில் மேம்படும் என்பது ஐதீகமாகும்.
இதன்படி மஹாதேவ காலபைரவாஷ்டமியை முன்னிட்டு உலகில் கொடிய நோய்கள் இல்லாமல் அன்பு-அமைதி நிலவவேண்டியும், இந்தியாவில் இயற்கை சீற்றங்கள் இல்லாத நிலைவேண்டியும், விவசாயம் உள்ளிட்ட அனைத்து தொழில்களும் சிறந்திடவும்,
பக்தர்கள் வாழ்வில் செல்வ வளம் பெருகி கொழித்திடவேண்டியும், நோய், நொடிகள், கடன் தொல்லைகள் இல்லாமல் வளமாக நலமாக வாழவேண்டியும் ஸ்ரீமஹா காலபைரவருக்கு லட்சார்ச்சனையுடன் மஹா யாக சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது.
சிறப்பு வழிபாடுகள், காலை 9.20மணிக்கு விநாயகர் வழிபாடும், 9.25மணிக்கு நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமமும், 9.45மணிக்கு கன்னிகா பூஜையும், 9.50மணிக்கு மஹா பிரத்தியங்கிராதேவி-மஹா காலபைரவர் ஹோமத்துடன் தொடங்குகிறது.
அதனைத்தொடர்ந்து, காலை 10மணி முதல் மதியம் 2மணி வரை மஹா காலபைரவருக்கு ''சாக்தஸ்ரீ'' சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் மஹா பிரத்தியங்கிராதேவி காலபைரவருக்கு லட்சார்ச்சனை இடைவிடாமல் தொடர்ந்து நடக்கிறது. மதியம் 2 மணிக்கு மஹா கால பைரவருக்கு பால், பன்னீர், தேன், தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட 64வகையான அபிஷேகமும், தொடர்ந்து, ரோஜா, தாமரை, மல்லிகை, முல்லை என பல வகையான மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாரதனையுடன் கூடிய சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது.
மதியம் 1மணிக்கு மஹா அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலை 4.40மணிக்கு காலபைரவர் மஹா யாக வழிபாடுகள் தீபாராதனையுடன் நிறைவடைகிறது.
வாழ்வில் செல்வ வளம் கொழித்திடும் மஹாதேவ காலபைரவாஷ்டமி சிறப்பு லட்சார்ச்சனை மற்றும் மஹா யாக வழிபாட்டில் பக்தர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்று காலபைரவரின் அருள்பெற்று வளமோடு நலமாக வாழ்ந்திடவும் என சீனிவாச சித்தர் கேட்டுக்கொண்டுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu