ஆவின் பால் தட்டுப்பாடு: தூத்துக்குடியில் பால்வளத்துறை அமைச்சர் நாசர் நேரில் ஆய்வு

ஆவின் பால் தட்டுப்பாடு: தூத்துக்குடியில் பால்வளத்துறை அமைச்சர் நாசர் நேரில் ஆய்வு
X

தூத்துக்குடி ஆவின் அலுவலகத்தில் பால்வளத் துறை அமைச்சர் நாசர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து பால்வளத் துறை அமைச்சர் நாசர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஒருவாரமாகவே ஆவின் பால் பொதுமக்களுக்கு சரியாக விநியோகம் செய்யப்படவில்லை என்றும் இதுகுறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அதாவது, தூத்துக்குடி மாவட்டத்திற்கு தினசரி 38 ஆயிரம் லிட்டர் பால் விநியோகம் செய்யப்படுவது வழக்கம். ஆனால் கடந்த ஒரு வாரமாக காலமாக குறைவாகவே பால் விநியோகம் செய்யப்பட்டது. 28 ஆயிரம் லிட்டர் பால் மட்டுமே தூத்துக்குடி மாவட்டத்தில் விநியோகம் செய்யப்பட்டதால், பொதுமக்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் வழங்கமுடியவில்லை என ஆவின் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனால் பல பகுதிகளில் பால் தட்டுப்பாடு ஏற்பட்டது. பல பகுதிகளில் பால் காலதாமதமாகவே இறக்குமதி செய்யப்பட்டு காலை 9 மணிக்கு பிறகு பால் விநியோகம் நடைபெற்றுள்ளது. இது பொது மக்களுடைய பெரிய அளவில் அதிருப்தி ஏற்படுத்தியது. இது குறித்து பொதுமக்கள் பலர் புகார் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட ஆவின் அலுவலகத்தில் பால்வளத் துறை அமைச்சர் நாசர் நேரடியாக ஆய்வு மேற்கொண்டனர்.

பால் கொள்முதல், விநியோகம் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் ஆய்வு செய்த அவர், பால் வினியோகத்தை பொதுமக்களுக்கு குறித்த நேரத்தில் வழங்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் நாசர் கூறியதாவது:

வழக்கமாக இந்த காலகட்டத்தில் நாடு முழுவதும் பால் உற்பத்தி குறைவாக இருக்கும். அதனால், தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டது. தற்போது அது சரி செய்யப்பட்டு விட்டது. ஒரு சில இடங்களில் போக்குவரத்தில் ஏற்பட்ட சில மாற்றங்களால் விநியோகம் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. மூன்று விதமான ஆய்வுகளுக்கு பிறகு பால் விநியோகம் செய்யப்படுவதால் பால் அளவு குறைவாக இருப்பது என்று சொல்வது தவறான தகவல்.

கோடைகாலம் வரஉள்ளதால் ஆவினில் கூடுதலான வித விதமான ஐஸ்கிரீம்கள் தயார் செய்யப்பட உள்ளன. கலப்படம் இன்றி பால் வழங்கப்படுகிறது. பொதுமக்கள் சேவைக்காக ஆவின் நிறுவனம் இயங்கி வருகிறது. லாபம் மட்டும் நோக்கம் அல்ல என அமைச்சர் நாசர் தெரிவித்தார்.

Tags

Next Story
டெல்லி டூ அமெரிக்கா அரை மணி நேரத்துலயா? என்னப்பா சொல்ற எலான் மஸ்க்..! | Delhi to America Flight Timings