Cows Theft By Vehicle தூத்துக்குடியில் சுமை ஆட்டோவில் மாடுகள் திருடிய இருவர் கைது:போலீசார் விசாரணை

Cows Theft By Vehicle  தூத்துக்குடியில் சுமை ஆட்டோவில் மாடுகள் திருடிய இருவர் கைது:போலீசார் விசாரணை
X
Cows Theft By Vehicle தூத்துக்குடியில் சுமை ஆட்டோவில் சென்று மாடுகளை திருடிய 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 2 மாடுகள் மற்றும் திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட சுமை ஆட்டோ ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Cows Theft By Vehicle

தூத்துக்குடி மாவட்டத்தில் கார்களில் சென்று ஆடுகள், மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளை திருடிச் செல்லும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அவர்களை கண்காணித்து கைது செய்த போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த சில மாதங்களில் கார்களில் சென்று ஆடுகளை திருடியதாக பத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த நிலையில், தூத்துக்கடி சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முருகேசன்நகர் பகுதியைச் சேர்ந்த உத்தண்டுராஜ் (39) என்பவர் கடந்த 15.11.2023 அன்று இரவு தனது மாடுகளை தனது வீட்டு முன்பு உள்ள மாட்டு கொட்டைகையில் கட்டி வைத்துள்ளார். பின்னர் வந்து பார்க்கும்போது அதில் 2 மாடுகள் திருடு போனது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து உத்தண்டுராஜ் நேற்று அளித்த புகாரின் பேரில் சிப்காட் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், தூத்துக்குடி லெவிஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர்களான மாரியப்பன் மகன் வேலாயுதம் (24), செம்புலிங்கம் மகன் மாசானமுத்து (21) மற்றும் சிலர் சேர்ந்து உத்தண்டுராஜ் வீட்டு மாட்டு கொட்டைகையில் கட்டியிருந்த 2 மாடுகளை சுமை ஆட்டோ வாகனத்தின் மூலம் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதனையடுத்து சிப்காட் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சண்முகம் மற்றும் போலீசார் மாடுகளை திருடியதாக வேலாயுதம் மற்றும் மாசானமுத்து ஆகிய இருவரையும் கைது செய்தனர். கைதான இருவரிடம் இருந்தும் திருடப்பட்ட ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள இரண்டு மாடுகள் மற்றும் திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட சுமை ஆட்டோ வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும், இதுகுறித்து சிப்காட் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!