தூத்துக்குடி சிவன் கோயில் மைதானத்தில் மாநகராட்சி குப்பைகள்
குப்பைகள் தேங்கி காணப்படும் தூத்துக்குடி சிவன் கோயில் மைதானம்.
தூத்துக்குடி மாநகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேஸ்வரர் திருக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது ஆகும். இந்தக் கோயிலுக்கு சொந்தமான பாரி வேட்டை மைதானம் தூத்துக்குடி-ராமேஸ்வரம் ரோடு பொன்னகரம் ரவுண்டானா பகுதியில் அமைந்துள்ள உள்ளது.
இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த இடத்தில் தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் இருந்து எடுக்கப்படும் குப்பைகள், கழிவுகள் அனைத்தையும் மாநகராட்சி வாகனங்களில் கொண்டு வந்து கொட்டி வருகின்றனர் என்றும் இதனால் பாரி வேட்டை மைதானம் முழுவதும் குப்பை மேடாக காட்சியளிப்பதாக இந்து முன்னணி அமைப்பு புகார் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக இந்து முன்னணி அமைப்பின் மாநகர தலைவர் இசக்கி முத்துக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:
பாரி வேட்டை மைதானத்தில் கொட்டப்படும் குப்பாகள் அதிகளவு தேங்கி உள்ளதால் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் அருகாமையில் வசிக்கும் பொதுமக்களுக்கு நோய் தொற்றை ஏற்படுத்தும் அபாயத்தையும் ஏற்படுத்தி வருகிறது. இந்த இடத்தின் அருகில் தான் இந்து சமய அறநிலையத் துறையின் உதவி ஆணையர் அலுவலகமும் உள்ளது.
இந்த நிர்வாகத்திற்கு தெரிந்து தான் மாநகராட்சி நிர்வாகம் இந்த இடத்தில் குப்பையை கொட்டுகிறதா? இந்த இடத்தில் குப்பையை கொட்ட அனுமதித்த அதிகாரி யார்? என பொதுமக்கள் கேள்வி கேட்கின்றனர். கடந்த பல ஆண்டுகளாக குப்பை மேடாக இருந்த இடத்தை சீர் செய்ய இந்து முன்னணி எடுத்த பல்வேறு நடவடிக்கைகளால் இதனை சுத்தம் செய்து பாரிவேட்டை மைதானத்தை ஆக்கிரமிப்பு காரர்களிடம் இருந்து மீட்டு தற்போது சுத்தமான மைதானமாக வைத்திருந்தது.
இந்த நிலையில் தற்போது மீண்டும் பாரி வேட்டை மைதானத்தை குப்பை மேடாக மாநகராட்சி நிர்வாகமே மாற்றுவது பொதுமக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. நோய் தொற்றை ஏற்படுத்தும் அபாயகரமான குப்பை கழிவுகளை இந்த இடத்திலிருந்து அகற்றி அவ்விடத்திற்கு வேலை அமைத்து சிவன் கோவில் நிலத்தை பாதுகாக்க வேண்டும் என இந்து முன்னணி தூத்துக்குடி மாநகர் மாவட்டத் தலைவர் இசக்கி முத்துக்குமார் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu