/* */

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரிக்கு எதிராக போர்கொடி…தூத்துக்குடி மாவட்டத் தலைவர் ராஜினாமா..

காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ். அழகிரிக்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் காமராஜ் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

HIGHLIGHTS

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரிக்கு எதிராக போர்கொடி…தூத்துக்குடி மாவட்டத் தலைவர் ராஜினாமா..
X

காங்கிரஸ் மாவட்டத் தலைவர் காமராஜ்.

தமிழகத்தில் கடந்த 1967 ஆம் ஆண்டு ஆட்சியை இழந்த காங்கிரஸ் கட்சியால் அதற்கு பிறகு ஆட்சிக்கு வர முடியவில்லை என்பதற்கு பல காரணங்கள் உண்டு. அதில், முக்கிய காரணமாக கருதப்படுவது அந்தக் கட்சியில் நிலவி வரும் கோஷ்டி பூசல்தான்.

காங்கிரஸ் கட்சியில் தொண்டர்களைவிட தலைவர்கள் தான் அதிகம் என எதிர்கட்சியைச் சேர்ந்தவர்கள் விமர்சனம் செய்வது உண்டு. தேசியக் கட்சி என்பதால் மாநிலத்தில் நிகழும் கோஷ்டி பூசல் விவகாரங்களை அந்தக் கட்சியின் தலைமை பெரிதாக எடுத்துக் கொள்வது கிடையாது.

கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக திராவிடக் கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவுடன் காங்கிரஸ் பல முறை கூட்டணி வைத்துள்ளது. இருப்பினும், தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை அமைப்போம் என முழக்கத்தை ஒருபோதும் அந்தக் கட்சி கைவிட்டது இல்லை.

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவராக தலைமை யாரை நியமித்தாலும் அவர்களுக்கு மற்ற சில தலைவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பது வாடிக்கையாகவிட்டது. இந்த நிலையில், சென்னை சத்தியமூர்த்தி பவனில் கடந்த 15 ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தின்போது, தற்போதைய தலைவர் கே.எஸ். அழகிரி தரப்பிற்கும், மாநில பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தரப்பிற்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து, கட்சி நிர்வாகிகளை தூண்டிவிடுவதாகக் கூறி பொருளாளர் ரூபி மனோகரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கட்சியின் தலைமை மற்றும் தமிழக பொறுப்பாளருக்கு மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி புகார் மனு அனுப்பி உள்ளார். அதற்கு, ரூபி மனோகரன் தரரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

இந்த நிலையில், ரூபி மனோகரனுக்கு ஆதரவாக களம் இறங்கிய தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரான காமராஜ், தொண்டர்களின் கருத்தை கேட்காமல் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி தன்னிச்சையாக செயல்படுவதால் மாவட்டத் தலைவர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் வைத்து காங்கிரஸ் கட்சியின் வடக்கு மாவட்ட தலைவர் காமராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சென்னையில் கடந்த 15 ஆம் தேதி சத்தியமூர்த்தி பவனில் கட்சிக்கு எதிராக நடந்த சம்பவங்களுக்கு மாநிலத் தலைவரும், மாநில பொருளாளரும் தான் பொறுப்பு. அதை விடுத்து மாநில பொருளாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினராக உள்ள ரூபி மனோரான் மீது மட்டும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்வது வேடிக்கை.

மேலும், மாவட்டத் தலைவர்களை கலந்து ஆலோசிக்காமல் தீர்மானம் நிறைவேற்றம் என்பது தன்னிச்சையான செயல். திருநெல்வேலி மாவட்ட தொண்டர்களின் கோரிக்கை என்னவென்று கேட்காமல் அவர்களை அவமானப்படுத்தி குண்டர்களை வைத்து தாக்குவது தலைமைக்கு அழகு அல்ல.

ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் 6 பேர் விடுதலையை கண்டித்து கண்டன தீர்மானம் கூட அந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்படவில்லை. மேலும், 6 பேர் விடுதலையை எதிர்த்து கட்சியின் தலைமை எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்காதது வருத்தத்தை அளிக்கிறது.

காங்கிரஸ் கட்சியில் நடைபெற்று முடிந்த உட்கட்சித் தேர்தல் ஜனநாயக ரீதியாக நடைபெறவில்லை. பணம் வாங்கிக் கொண்டு பொறுப்புக்கள் வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட தலைவர்களுக்கு தெரியாமல், கலந்து ஆலோசிக்கமால் பொறுப்புக்கள் வழங்கப்பட்டு உள்ளது.

மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தன்னுடைய கோரிக்கை மட்டும் பெரிது என்று நினைக்கிறார். கட்சி வளர்ச்சி தொடர்பாக கேட்க வரும் கட்சித் தொண்டர்களை அடிக்கும் நிலை காங்கிரஸ் கட்சியில் உள்ளது. எனவே, காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் பதவியில் தான் தொடர விரும்பவில்லை. எனது ராஜினாமா தொடர்பாக மாநிலத் தலைவருக்கு கடிதம் அனுப்பி உள்ளேன் என காமராஜ் தெரிவித்துள்ளார்.

Updated On: 20 Nov 2022 5:40 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அடிக்கடி முகத்தில் சவரம் செய்தால் முடி அடர்த்தியாக வளருமா?
  2. உலகம்
    உலகில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வசிக்கும் நாடுகள் குறித்து...
  3. லைஃப்ஸ்டைல்
    ராகி தோசை மற்றும் தேங்காய் சட்னி செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    கருவுற்ற தாய்மார்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்னைகளை தடுப்பது...
  5. மேட்டுப்பாளையம்
    மேட்டுப்பாளையத்தில் 1.15 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. தொழில்நுட்பம்
    ஏலியன் நாகரிக அறிகுறிகளைக் காட்டும் 7 நட்சத்திரங்களை கண்டறிந்த...
  7. லைஃப்ஸ்டைல்
    வண்ண வண்ணமாக அரிசி..! எது ஆரோக்யம்..?
  8. கோவை மாநகர்
    சட்டமன்றத் தேர்தல் கூட்டணியை காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்யும் :...
  9. லைஃப்ஸ்டைல்
    வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் சத்தான பானங்கள் பற்றித் தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    குளிர்சாதன பெட்டியில்(Fridge) வைக்கக்கூடாத பழங்கள்..!