Collector Thanks To All Department Staffs குலசை தசரா விழா அலுவலர்களுக்கு நன்றி தெரிவித்த மாவட்ட ஆட்சியர்

Collector Thanks To All Department Staffs  குலசை தசரா விழா அலுவலர்களுக்கு  நன்றி தெரிவித்த மாவட்ட ஆட்சியர்
X

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி. (கோப்பு படம்).

Collector Thanks To All Department Staffs குலசேகரப்பட்டினம், அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயிலின் தசரா திருவிழா நடைபெற்றது தொடர்பாக அனைத்துத்துறை அரசு அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி நன்றி தெரிவித்துள்ளார்.

Collector Thanks To All Department Staffs

தமிழ்நாடு அரசு, இந்து சமய அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டில் உள்ள தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், குலசேகரப்பட்டினம், அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயிலில் தசரா திருவிழா கடந்த 15 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

முக்கிய நிகழ்வான மகிசாசூரசம்ஹாரம் 24 ஆம் தேதி நடைபெற்றது. தொடர்ந்து, 25 ஆம் தேதி கொடியிறக்க நிகழ்ச்சிக்குப் பின் காப்பு அவிழ்க்கும் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெற்றது. இந்தத் திருவிழாவினைக் காண 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தந்துள்ளார்கள். இதில் 10 மற்றும் 11 ஆம் திருநாளில் மட்டும் 15 லட்சம் பேர் திருக்கோயிலுக்கு வருகை தந்துள்ளதாக கூறப்படுகிறது.

மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி அறிவுரையின்படி, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகைபுரிந்த பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, விரிவான வாகனங்கள் நிறுத்துமிட வசதி, பக்தர்களின் பாதுகாப்புக்காக திருக்கோயில் மூலம் ஏற்படுத்தப்பட்ட கண்காணிப்பு கேமரா வசதி, பக்தர்கள் எளிதில் தரிசனம் செய்ய மேற்கொள்ளப்பட்ட வசதிகள், திருக்கோயில் மூலம் சிறப்பாக செய்யப்பட்டன.

மேலும், பல்வேறு ஊர்களிலிருந்து வருகைதந்த பக்தர்களுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மூலம் சுமார் 250 சிறப்பு பேருந்து வசதிகள், பக்தர்களின் பாதுகாப்பு கருதி காவல்துறையினரால் 3000-க்கும் மேற்பட்ட காவலர்களைக் கொண்டு ஏற்படுத்தப்படட பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டன.

தீயணைப்பு வசதி, 12 ஆம்புலன்ஸ்களை திருக்கோயில் வளாகம், கடற்கரை மற்றும் பைபாஸ் பகுதிகளில் பணியமர்த்தி மேற்கொள்ளப்பட்ட மருத்துவ வசதி, தொற்றுநோய் எதுவும் பரவாமல் தடுக்கும் பொருட்டு, தினமும் இரண்டு முறை கொசு மருந்து அடித்தல், குப்பைகளை அவ்வப்போது அப்புறப்படுத்துதல், தேவையான அளவு குடிநீர் வசதி மற்றும் குடிநீரில் தினமும் குளோரின் அளவு சரிபார்ப்பு பணி, கடலில் குளிக்கும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி கடலோர காவல்படை மற்றும் மீன் வளத்துறையினர் துணையுடன் பாதுகாப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டன.

தொடர் மின்சாரம் கிடைத்திட மின்சாரத்துறையினரால் ஏற்படுத்தப்பட்ட வசதி, கூட்ட நேரங்களில் விரைந்து பக்தர்களை தொடர்பு கொள்ள ஏதுவாக ஏற்படுத்தப்பட்ட மேம்படுத்தப்பட்ட தொலைத் தொடர்பு வசதிகள், உணவு மற்றும் பாதுகாப்பு துறையினரால் அனைத்து உணவு கடைகள் மற்றும் அன்னதானம் நடைபெறும் இடங்களில் அவ்வப்போது மேற்கொள்ளப்பட்ட ஆய்வுப்பணிகள் திருக்கோயிலுக்கு வருகை தந்த பக்தர்கள் பாதுகாப்பாகவும் சிரமமின்றியும் சிறந்த முறையில் தரிசனம் செய்யும் வகையில் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தால் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

மாவட்ட நிர்வாகம் மற்றும் இந்து சமய அறநிலைத்துறை மூலமாக மேற்கொள்ளப்பட்ட அனைத்து துப்புரவு முன்னேற்பாடுகளும், அனத்துத்துறை அலுவலர்களின் தொடர் பணிகளாலும் தசரா திருவிழா எந்தவொரு சிறு அசம்பாவிதமும் இல்லாமல், பக்தர்களுக்கு எந்தவொரு இடையூறு இல்லாமலும் நிறைவடைந்துள்ளது.

மேலும், இப்போது நிறைவடைந்த திருவிழாவில் எப்போதும் இல்லாத வரலாற்று நிகழ்வாக சுமார் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை புரிந்தாலும், மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பான முன்னேற்பாடுகளினால் எந்த சிறு அசம்பாவிதமோ, அசௌகரியமோ இல்லாமல் திருவிழா நிறைவடைந்தது மிகப்பெரும் சாதனையாகும் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, குலசை தசரா திருவிழாவினை சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு நல்கிய அனைத்துத்துறை அலுவலர்களுக்கும் பக்தர்களின் நலன்கருதி செய்யப்பட்ட ஏற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு கொடுத்த பக்தர்களுக்கும், அன்னதான உபயதாரர்களுக்கும், இந்து சமய அறநிலையத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி நன்றி அறிவிப்பு தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
ஈரோட்டில் வருமான வரித் துறை சோதனை நிறைவு..!