தூத்துக்குடி மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்ட ஆட்சியர்
இந்திய தேர்தல் ஆணையத்தால் 01.01.2024யை தகுதி நாளாகக் கொண்டு நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தப்பணிகள் முடிவுபெற்ற நிலையில், இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமிபதி அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.
2024 ஜனவரி 1 முதல் சவுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கம் முறை திருத்தம் 27.10.2023 முதல் 09.12.2023 வரை நடைபெற்றது.
இதில் மாவட்டத்தில் மொத்தம் 71 ஆயிரத்து 792 மனுக்கள் பெறப்பட்டது. அதில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு 69 ஆயிரத்து 885 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு இன்றைய தினம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில், 7,08244 ஆண் வாக்காளர்கள், 7,39,720 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 14 லட்சத்து 48 ஆயிரத்து 179 வாக்காளர்கள் உள்ளனர். இதர வாக்காளர்கள் 215 பேரும் உள்ளனர் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
சட்டமன்ற தொகுதி வாரியாக:
இதில் சட்டமன்ற தொகுதி வாரியாக விளாத்திகுளத்தில் 2 லட்சத்து 9472 வாக்காளர்களும்,
தூத்துக்குடியில் 2 லட்சத்து 80 ஆயிரத்து 125 வாக்காளர்களும்,
திருச்செந்தூரில் 2 லட்சத்து 39 ஆயிரத்து 884 வாக்காளர்களும்,
ஸ்ரீவைகுண்டத்தில் 2 லட்சத்து 22 ஆயிரத்து 393 வாக்காளர்களும்,
ஓட்டப்பிடாரத்தில் 2 லட்சத்து 43 ஆயிரத்து 168 வாக்காளர்களும்,
கோவில்பட்டியில் 2 லட்சத்து 53 ஆயிரத்து 137 வாக்காளர்களும்
மொத்த வாக்கு சாவடிகள் 1622 உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu