சாலையில் தரத்தை அளந்து பார்த்து ஆய்வு செய்த தூத்துக்குடி ஆட்சியர்

சாலையில் தரத்தை அளந்து பார்த்து ஆய்வு செய்த தூத்துக்குடி ஆட்சியர்
X

சாலையில் தரம் மற்றும் அளவு குறித்து டேப் மூலம் ஆட்சியர் செந்தில்ராஜ் ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் சாலைப் பணிகளை ஆய்வு செய்தபோது இருபுறமும் அளவு சரியாக உள்ளதா? என நேரடியாக அளந்து பார்த்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் சாலைகளின் தரம் மற்றும் அளவு குறித்து அளவீடு செய்து ஆய்வு செய்தது அதிகாரிகள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது, தூத்துக்குடி - ஸ்ரீவைகுண்டம் சாலையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 3.85 கோடி செலவில் பேட்மாநகரம் முதல் வாகைக்குளம் வரை 4 கிலோ மீட்டர் நீளத்திற்கு புதிதாக அமைக்கப்பட்டுள்ள சாலை பணிகளை பார்வையிட்டார்.

மேலும், சாலைப் பணிகளை நேரில் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தார் சாலையின் அளவு மற்றும் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். முடிவடைந்த சாலையில் நடைபெற்ற பணிகளை இரண்டு புறமும் அளவு சரியாக உள்ளதா? என அளவீடு செய்யும் வகையில் டேப் பிடித்து சாலையில் அமர்ந்து ஆட்சியரே நேரடியாக ஆய்வு மேற்கொண்டார்.


மேலும், அதிகாரிகளை சாலையின் இருபுறமும் டேப் பிடிக்க வைத்து, பணிகள் நடைபெற்றது தொடர்பாக சாலையின் அளவை தெரிந்து கொள்ளும் வகையில் ஆட்சியர் செந்தில்ராஜ் ஆய்வு மேற்கொண்டார். இதேபோல கோவங்காடு கிராமத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 2.12 கோடி செலவில் நடைபெற்ற புதிய புதிதாக அமைக்கப்பட்ட தார் சாலை பணிகளையும் அந்தப் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் பாலத்தின் பணிகளையும் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் பார்வையிட்டு அளவீடு செய்து ஆய்வு மேற்கொண்டார்.

இதேபோல, தூத்துக்குடி பாளையங்கோட்டை சாலையில் புதுக்கோட்டை அருகில் ரூ. 95 லட்சம் செலவில் புதிதாக அமைக்கப்பட உள்ள உயர்மட்ட பாலம் பணிகள் குறித்தும் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!