மகனை டூப்ளிகேட் ஹீரோ ஆக்காமல் நிஜ ஹீரோ ஆக்கிய நடிகர் சின்னி ஜெயந்த்

சின்னி ஜெயந்த் - ஸ்ருஜன் ஜெய்
தனது மகனை டூப்ளிகேட் ஹீரோ ஆக்காமல் நிஜ ஹீரோ ஆக்கிய நடிகர்..நடிகர் சின்னி ஜெயந்த் மகன் ஸ்ருஜன் ஜெய், கடந்தாண்டு சிவில் சர்வீசஸ் தேர்வில் இந்தியாவிலேயே ௭௫ வது இடம் பிடித்தது மட்டுமின்றி முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்று அசத்தினார்.இந்நிலையில், சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஸ்ருஜன் ஜெய், தற்போது தூத்துக்குடி மாவட்டத்தின் துணை ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தனது மகனை டூப்ளிகேட் ஹீரோ ஆக்காமல் நிஜ ஹீரோ ஆக்கிய நடிகர்..
தூத்துக்குடி துணை கலெக்டரான சின்னி ஜெயந்தின் மகன்
நடிகர் சின்னி ஜெயந்த் மகன் ஸ்ருஜன் ஜெய், கடந்தாண்டு சிவில் சர்வீசஸ் தேர்வில் இந்தியாவிலேயே 75 வது இடம் பிடித்தது மட்டுமின்றி முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்று அசத்தினார்.இந்நிலையில், சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஸ்ருஜன் ஜெய், தற்போது தூத்துக்குடி மாவட்டத்தின் துணை ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.வாழ்த்துக்கள் இருவருக்கும்.
ரஜினிகாந்தின் 'கை கொடுக்கும் கை' படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகர் சின்னி ஜெயந்த். 90 களில் ரஜினி, கமல், முரளி உள்ளிட்ட நடிகர்களோடு நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரீட்சயமானார். நகைச்சுவை நடிகராகவும், குணசித்திர வேடங்களிலும் நடித்து வந்தார். மிமிக்ரி செய்தும் சின்னி ஜெயந்த் அசத்தி வந்தார்.
இவரது மகன் ஸ்ருஜன் ஜெய், கடந்தாண்டு நடைபெற்ற சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றார். இந்தியாவிலேயே 75ஆவது இடம்பிடித்த அவர், முதல் முயற்சிலேயே தேர்ச்சி பெற்று தனது பெற்றோருக்கு ஆச்சர்யத்தை கொடுத்தார்.
அவரது சாதனையை தமிழ் திரையுலகினர் பாராட்டிய நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஸ்ருஜன் ஜெய்யை வாழ்த்தியதாக சின்னி ஜெயந்த் கூறினார். சின்னி ஜெயந்தின் மகன் தனது பெற்றோரை பெருமைப்படுத்தும் வகையில் இதை சாதித்ததில் மிகவும் பெருமைப்படுகிறேன் என்றும் கூறினார்.
ஸ்ருஜன் நிர்வாக சேவையில் ஈடுபடும்போது கல்வி, வர்த்தகம் மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் ஆகியவற்றின் வளர்ச்சியில் கவனம் செலுத்துவதாக கூறியிருந்தார்.
இந்த நிலையில், ஸ்ருஜன் ஜெய், தூத்துக்குடி மாவட்டத்தின் துணை ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் உள்ளிட்ட பலர் ஸ்ருஜன் ஜெய் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.
சின்னி ஜெயந்த் 1984 இல் இயக்குனர் மகேந்திரனின் கை கொடுக்கும் கை படத்தில் ரஜினிகாந்த் உடன் வில்லனாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். அதன் பிறகு அவர் தனது தனித்துவமான நகைச்சுவை பாணியில் தனக்கென ஒரு முக்கிய இடத்தை பிடித்தார்.
இன்ஸ்டாநியூஸ் சார்பில் வாழ்த்துக்கள் இருவருக்கும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu