சட்டத்திற்கு முரணான செயல்களை செய்யும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு: அதிர்ச்சி தகவல்
தூத்துக்குடியில் குழந்தைகள் நல ஆர்வலர் தேவநேயன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
தூத்துக்குடியில் தோழமை அமைப்பு, யுனிசெப் நிறுவனம் மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு அலகு ஆகியவை சார்பில், குழந்தைகள் பாதுகாப்பில் பத்திரிகையாளர்களின் பங்கு என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது இந்த கருத்தரங்கில் தோழமை அமைப்பை சேர்ந்த குழந்தைகள் நல ஆர்வலர் தேவநேயன், மூத்த பத்திரிகையாளர் மணி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலெக்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். நிகழ்ச்சியில், பத்திரிகையாளர்கள் பலர் பங்கேற்றனர்.
தொடர்ந்து, தோழமை அமைப்பு குழந்தைகள் நல ஆர்வலர் தேவநேயன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களில் 600-க்கும் மேற்பட்ட குழந்தைகள் காணாமல் போய் உள்ளனர். அவர்களில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளனர். மேலும், தமிழகத்தில் உள்ள காணாமல் போன குழந்தைகள் வட மாநிலங்களில் பிச்சை எடுப்பதற்காக பயன்படுத்தப்படுவதுடன் வட மாநிலங்கள் மற்றும் கேரளாவில் காணாமல் போன குழந்தைகள் தமிழகத்தில் பிச்சை எடுப்பதற்காக பயன்படுத்தி இந்தச் செயலில் தேசிய அளவில்ஒரு கும்பல் செயல்பட்டு வருகிறது.
மேலும், சட்டத்திற்கு முரணான செயல்களை செய்யும் குழந்தைகளின் எண்ணிக்கை தூத்துக்குடி மாவட்டம் மட்டுமல்லாது தேசிய அளவில் அதிகரித்துள்ளது என தேசிய குற்றவியல் ஆய்வு அறிக்கை 2021 தெரிவித்துள்ளது. சிறார்கள் செய்யும் குற்றவியல் சம்பவங்கள் பல்வேறு வடிவங்களில் அதிகரித்துள்ளது. குழந்தைகளை போதைக்கு அடிமையாக்கி குற்ற சம்பவங்களின் ஈடுபடுத்தும் வகையில் நெட்வொர்க் மூலம் ஒரு கும்பல் செயல்பட்டு வருகிறது. அதை தடுக்க வேண்டிய கடமை அரசு மற்றும் சமூகம் இணைந்து செயல்பட்டு தடுக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் வன்முறைகள் இல்லாத மாவட்டமாக தூத்துக்குடி மாவட்டம் மற்றும் தமிழகத்தை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று குழன்தைகள் நல ஆர்வலர் தேவநேயன் தெரிவித்தார். பேட்டியின்போது, தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலெக்ஸ் உடனிருந்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu