தூத்துக்குடியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்: நலத்திட்ட உதவிகள் வழங்கல்

தூத்துக்குடியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்: நலத்திட்ட உதவிகள் வழங்கல்
X

தூத்துக்குடியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மூவர்ண பலூன்களை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் பறக்கவிட்டார்.

தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

நாட்டின் 77 ஆவது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி தூத்துக்குடியில் மாவட்ட விளையாட்டு அரங்கில் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணனனுடன் ஜிப்பில் சென்று அவர் ஏற்றுக்கொண்டார். இதைத் தொடர்ந்து காவல்துறை மற்றும் அரசு துறையில் சிறப்பாக பணியாற்றிய 363 பேருக்கு நற்சான்றிதழ் மற்றும் பதக்கங்களை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வழங்கினார்.

மேலும், மாவட்டத்தில் உள்ள பல்வேறு துறைகள் சார்பில், சுமார் ஒரு கோடியே 15 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வழங்கினார். தொடர்ந்து, மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

நிகழ்ச்சியின் போது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் சார்பில் 54 ஆயிரத்து 790 ரூபாய் மதிப்பிலான தையல் இயந்திரம் வழங்கப்பட்டது. மேலும் 42 ஆயிரத்து 728 ரூபாய் மதிப்புள்ள இஸ்திரி பெட்டிகள் 8 பேருக்கு வழங்கப்பட்டது. மேலும், கூட்டுறவுத்துறை மூலம் 42 மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு ஒரு கோடியே 4 லட்சம் மதிப்புள்ள கடனுதவி வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், அரசு அலுவலர்கள், ஊழியர்கள், காவல் துறையினர், பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவின்போது, சமாதானத்தை வலியுறுத்தும் வகையில், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ஆகியோர் வெள்ளைப் புறாக்களை பறக்கவிட்டனர். மேலும், மூவர்ண பலூன்களையும் பறக்கவிட்டனர்.

Tags

Next Story
ai solutions for small business