தென் தமிழகத்தில் சாதிய வன்முறைகள் அதிகரிப்பு: தெலுங்கானா ஆளுநர் தமிழிசை பேட்டி

தென் தமிழகத்தில் சாதிய வன்முறைகள் அதிகரிப்பு: தெலுங்கானா ஆளுநர் தமிழிசை பேட்டி
X

தூத்துக்குடி விமான நிலையத்தில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பேட்டியளித்தார்.

தென் தமிழகத்தில் சாதிய வன்முறைகள் அதிகரித்து உள்ளது என்பது கவலை அளிக்கின்றது என்று தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தூத்துக்குடியில் தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையத்துக்கு வந்த தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழக அரசிடம் இருந்து தீபாவளி வாழ்த்துகள் உங்களுக்கு கிடைக்காது என்பதால் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். தென் தமிழகத்திற்கு வருவது தாய் வீட்டிற்கு வருவதுபோல். அதனால் தென்மாவட்டத்திற்கு வருவது பிடிக்கும்.

சாதனை படைத்து வரும் தென் தமிழகம் இன்று சாதி விவகாரத்தில் அதிகரித்து உள்ளது மிகவும் வேதனையாக உள்ளது. அதைபோல் தமிழகத்தில் சாதிய வன்முறைகள் அதிகரித்து உள்ளது. எனவே அரசு இதில் கவனம் செலுத்த வேண்டும். ஆனால் நீட் தேர்வு விவகாரத்தை மட்டும் பேரிதாக பேசி வருகின்றனர். எதுவென்றாலும் சட்ட ரீதியாக அணுகுங்கள்.

சனாதானம் குறித்து பேசியதற்கு அமைச்சர் உதயநிதி மன்னிப்பு கேட்கமாட்டேன் என்று சொல்லி வருகின்றார். மன்னிப்பு கேட்க வேண்டியது நிறைய இருக்கிறது. எனவே கேட்கமாட்டேன் என்று சொல்வது சரியில்லை. இலங்கை பிரச்னையில் மத்திய அரசுடன் கூட்டணியில் இருந்த திமுக என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்.

பிரதமர் மோடி வந்தபிறகு மருத்துவத்தில் பல்வேறு சேவைகள் கொண்டுவரப்பட்டுள்ளது. மேகதாது தாது விவகாரம் குறித்து முதல்வரிடமும் கனிமொழி ஆகியோரிடம்தான் கேட்க வேண்டும். நட்பு ரீதியாக உள்ள கர்நாடக அரசிடம் இருந்து தண்ணீர் வங்க முடியாமல் இருக்கும்போது ஏன் அந்த கூட்டணி.

தமிழகத்தில் கொடை வள்ளல்களை பார்த்து இருக்கின்றோம் ஆனால் பேருந்தில் பயணிகளும் ,ஓட்டுனர்களும் குடை பிடித்து செல்லும் நிலை உள்ளது. எனவே ஓட்டையை சரிசெய்ய பாருங்கள். ஊழல்கள் யார் செய்தாலும் தண்டிக்கபட வேண்டும்.

தமிழக அமைச்சர்கள் வீட்டில் ரெய்டு நடப்பதில் கட்டிகட்டியாக தங்கம், பெட்டி பெட்டியாக பணம் எடுக்கப்படுகிறது. ஒன்றும் இல்லாமலா எடுக்கின்றார்கள். ஒன்றும் பிடிபடவில்லை என்று கூறுவது முழு பெரிய பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போன்று உள்ளது.

புதுச்சேரியில் சாதிவாரி கணக்கெடுப்பு வேண்டுமா? வேண்டாமா? என்பது கொள்கை முடிவு. அதனை முதல்வரிடம் பேசி செயல்பட வேண்டியது அவசியம். சாதி பாகுபாடை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மகளிர் உரிமைத்தொகை இரண்டம் கட்டம் என்பது வரும் ஆனால் வராது என்ற கதை-தான்.

குலசேகன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் அமைப்பது பிரதமர் மோடிக்கும் எங்களுக்கும் நிறைய பங்கு உள்ளது. ராக்கெட் ஏவுதளம் அமைப்பதன் மூலம் இன்னும் அந்த பகுதி வளர்ச்சி அடையும் என்று தெலுங்கானா ஆளுனர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தார்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil