பாஞ்சாலங்குறிச்சி கோயில் திருவிழா: விதிகளை மீறிய வாகனங்கள் மீது வழக்குப் பதிவு

பாஞ்சாலங்குறிச்சி கோயில் திருவிழா: விதிகளை மீறிய வாகனங்கள் மீது வழக்குப் பதிவு
X

தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன். (கோப்பு படம்).

பாஞ்சாலங்குறிச்சி திருவிழாவின்போது விதிமுறைகளை மீறி செயல்பட்ட 19 வாகனங்கள் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்

தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சியில் உள்ள வீரசக்கதேவி ஆலய திருவிழா கடந்த 12 ஆம் தேதி தொடங்கி 14 ஆம் தேதி வரை நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு, மாவட்டம் முழுவதும் இருந்து வாள் போன்ற ஆயுதங்களை கொண்டுச் செல்லக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை காவல் துறையினர் விதித்திருந்தனர்.

இந்த நிலையில், பாஞ்சாலங்குறிச்சி திருவிழாவின்போது அபாயகரமாகவும், பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக தட்டப்பாறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒரு கனரக வாகனம் மற்றும் 5 இருசக்கர வாகனங்கள் மீதும், திருச்செந்தூர் தாலுகா காவல் நிலையம் மற்றும் திருச்செந்தூர் கோவில் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தலா 2 இரு சக்கர வாகனங்கள் மீதும், ஆத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒரு இரு சக்கர வாகனமும், ஓட்டப்பிடாரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒரு கனரக வாகனம் மற்றும் 7 நான்கு சக்கர வாகனங்கள் மீதும் என மொத்தம் 2 கனரக வாகனங்கள், 7 நான்கு சக்கர வாகனங்கள் உட்பட 19 வாகனங்கள் மீது 11 வழக்குகள் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவுபடி, தூத்துக்குடி உட்கோட்டத்தில் 7 இடங்களிலும், தூத்துக்குடி ஊரக உட்கோட்டத்தில் 7, திருச்செந்தூர் உட்கோட்டத்தில் 6, ஸ்ரீவைகுண்டம் உட்கோட்டத்தில் 7, மணியாச்சி உட்கோட்டத்தில் 6, கோவில்பட்டி உட்கோட்டத்தில் 9, விளாத்திகுளம் உட்கோட்டத்தில் 9 மற்றும் சாத்தான்குளம் உட்கோட்டத்தில் 6 இடங்கள் என மாவட்டம் முழுவதும் மொத்தம் 57 இடங்களில் 8 காவல் துணை கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் 8 காவல் ஆய்வாளர்கள் தலைமையில் 68 உதவி ஆய்வாளர்கள் உட்பட 160 காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த வாகன சோதனையின்போது போதைப்பொருள் கடத்தல், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மற்றம் விதிமுறைகளை மீறுபவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவிட்டுள்ளார்.

Tags

Next Story
அடுத்த தலைமுறைக்கு  மருத்துவத்தை கொண்டு செல்லும் Google AI for Healthcare