பி.எஸ்சி. நர்சிங் படித்த பெண்களுக்கு சவுதி அரேபியாவில் பணிபுரிய வாய்ப்பு

பி.எஸ்சி. நர்சிங் படித்த பெண்களுக்கு சவுதி அரேபியாவில் பணிபுரிய வாய்ப்பு
X

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ். (கோப்பு படம்).

சவுதி அரேபிய அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய பிஎஸ்சி நர்சிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-

சவுதி அரேபிய அமைச்சகத்தின் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிவதற்கு குறைந்தபட்சம் 2 வருடம் வரை பணி அனுபவத்துடன் B.Sc Nursing தேர்ச்சி பெற்ற 35 வயதிற்குட்பட்ட பெண் செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள். Data Flow மற்றும் HRD சான்றிதழ்கள் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

பணியில் சேரும் செவிலியர்களுக்கு உணவுப்படி, இருப்பிடம், விமான பயணச்சீட்டு ஆகியவை அந்த நாட்டின் வேலையளிப்பவரால் வழங்கப்படும் என அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கான பதிவு முகாம் செப்டம்பர் 4 ஆம் தேதி காலை 10.30 மணி அளவில் திருநெல்வேலி பாளையங்கோட்டை பெருமாள்புரம் சி காலனி சிதம்பரநகரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறுகிறது.

செவிலியர் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் bit.ly/tvlomcl என்ற இணைய முகவரியில் பதிவு செய்துவிட்டு செப்டம்பர் 4 ஆம் தேதி திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்த முகாமிற்கு நேரில் வரமுடியாதவர்கள் தங்களுடைய சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்ப படிவத்தை ovemclmohsa2021@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு எந்த ஒரு இடைத்தரகரோ அல்லது ஏஜெண்டுகளோ கிடையாது. பதிவு மற்றும் பணி விவரங்களின் தகுதியை பொறுத்து முன்னுரிமை வழங்கப்படும்.

இந்த பணிக்கு தேர்வு பெறும் செவிலியர்களிடம் இருந்து சேவை கட்டணமாக ரூ. 35,400 மட்டும் வசூலிக்கப்படும். அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் மூலமாக அளிக்கப்படும் வெளிநாட்டு வேலைகளுக்கான பணிக்காலியிடங்கள் குறித்த விவரங்கள் இந்நிறுவனத்தின் வலைதளமான www.omcmanpower.com என்ற முகவரியில் தெரிந்து கொள்ளலாம். மேலும் ஊதியம் மற்றும் பணி விவரங்கள் பற்றிய விவரங்களை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் தொலைபேசி எண்களை (9566239685, 6379179200, 044-22505886, 044-22502267) வாயிலாக அறிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவத்துள்ளார்.

Tags

Next Story
Sudden Halt in Pongal Package Distribution at Erode East Ration Shops..!