தூத்துக்குடியில் புறா பந்தயத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு புல்லட் பரிசு

தூத்துக்குடியில் புறா பந்தயத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு புல்லட் பரிசு
X

தூத்துக்குடியில் புறா பந்தயத்தில் வெற்றி பெற்ற புறா உரிமையாளர்களுக்கு புல்லட் வாகனம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் கோல்டன் பிஜியன் ஸ்போர்ட்ஸ் சொசைட்டி சார்பில், 780 கிலோ மீட்டர் தூரம் ஆந்திர மாநிலம் சிங்கராய குண்டாவில் இருந்து தூத்துக்குடி வரையும், 600 கிலோ மீட்டர் தூரம் ஆந்திர மாநிலம் தடாவில் இருந்து தூத்துக்குடி வரையும், 480 கிலோமீட்டர் தூரம் காஞ்சிபுரத்தில் இருந்து தூத்துக்குடி வரையும், 200 கிலோமீட்டர் தூரம் தொழுதூரில் இருந்து தூத்துக்குடி வரையும், 150 கிலோமீட்டர் தூரம் மதுரையில் இருந்து தூத்துக்குடி வரையும் புறா பந்தயங்கள் நடைபெற்றன.

இந்த புறா பந்தயங்களில் சுமார் 200-க்கும் மேற்பட்ட புறாக்கள் கலந்து கொண்டன. புறா பந்தயங்களில் வெற்றி பெற்ற உரிமையாளர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி தூத்துக்குடியில் இன்று நடைபெற்றது. புறா பந்தயங்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழகத்திலேயே முதல் முறையாக இந்த புறா பந்தயங்களில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்ற மனோ என்பவருக்கு சாம்பியன் கோப்பையுடன் புல்லட் இருசக்கர வாகனம் மற்றும் புறாக்கள் பரிசாக வழங்கப்பட்டது.

இரண்டாம் இடம் பிடித்த பன்னீர்செல்வம் என்பவருக்கு சாம்பியன் கோப்பை சான்றிதழ் உள்ளிட்டவை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதும் இருந்து வந்திருந்த புறா பந்தய ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோல்டன் பிஜியன் ஸ்போர்ட்ஸ் சொசைட்டி தலைவர் ராஜா சிங் செயலாளர் ஜெய பாலாஜி, துணை செயலாளர் சைமன் ராஜ், பொருளாளர் ராயல் தினேஷ் கௌரவ ஆலோசகர்கள் பன்னீர்செல்வம் மணிகண்டன் திருமணி டாக்டர் குப்புசாமி ஆகியோர் செய்திருந்தனர்.

Tags

Next Story
டெல்லி டூ அமெரிக்கா அரை மணி நேரத்துலயா? என்னப்பா சொல்ற எலான் மஸ்க்..! | Delhi to America Flight Timings