தூத்துக்குடியில் கொடூரம்: தந்தையை வெட்டிக் கொலை செய்த மகன்

தூத்துக்குடியில் கொடூரம்: தந்தையை வெட்டிக் கொலை செய்த மகன்
X

தூத்துக்குடியில் கொலை நிகழ்ந்த இடத்தில் போலீசார் விசாரணை நடத்தினர்.

தூத்துக்குடியில் தாயை அவதூறாக பேசிய தந்தையை வெட்டி கொன்ற இளம் சிறாரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தூத்துக்குடி தமிழ் சாலையில் எம்ஜிஆர் பூங்கா அருகே உள்ள மையவாடியில் 35 வயது மதிக்கத்தக்க ஒருவர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். தகவல் அறிந்து வந்த தென்பாக போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், கொலையானவர் யார்? எதற்காக கொலை நிகழ்ந்தது என போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் , கொலையாணவர் ஆறுமுகநேரி பகுதியை சேர்ந்த சின்னத்துரை (36) என தெரியவந்தது. கட்டிடத் தொழிலாளியான சின்னத்துரைக்கும் அவரது மனைவி ராஜேஸ்வரிக்கும் இடையே நடந்த குடும்ப தகராறு காரணமாக மனைவி தனது பிள்ளைகளை அழைத்துகொண்டு தனது தாய் வீடு இருக்ககூடிய முத்தையாபுரம் பகுதிக்கு கடந்த தீபாவளி அன்று வந்துள்ளார் என தெரியவந்தது.

மேலும், குடிபோதையில் அங்கு வந்த சின்னத்துரை தனது மனைவி பிள்ளைகளை தனது வீட்டுக்கு வரும்படி கூறி தகராறு செய்துள்ளார். அப்போது, இருவருக்கும் இடையே கடுமையான சண்டை வந்துள்ளது. தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்டு தூத்துக்குடி மையவாடி வந்த சின்னத்துரை அங்கு வைத்து மது அருந்தி கொண்டு இருந்துள்ளார்.

அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த அவரது மூத்த மகன் தனது தந்தையிடம் குடித்துவிட்டு தாயிடம் பிரச்னை செய்ததை கண்டித்து உள்ளார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மகன் தான் கையில் கொண்டு வந்த அரிவாளால் தந்தை சின்னத்துரையை வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்‌

இந்த சம்பவம் தொடர்பாக கொலையுண்ட சின்னத்துரையின் மகனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், திடுக்கிடும் தகவல் வெளியானது. அதாவது கொலையான சின்னத்துரை குடித்துவிட்டு அடிக்கடி வந்து தனது தாய் ராஜேஸ்வரியிடம் தகராறு செய்வதோடு மட்டுமல்லாமல் அடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவாராம்.

இது தொடர்ந்து நடைபெற்றதால் ராஜேஸ்வரி தனது குழந்தைகளுடன் முத்தையாபுரம் பகுதிக்கு தீபாவளிக்கு வந்து உள்ளார். ஆனால் அங்கு வந்தும் தனது தந்தை குடித்துவிட்டு தாயை அவதூறாக பேசி தகராறு செய்ததால் ஆத்திரத்தில் அவரை வெட்டி கொன்று விட்டு உடலை மையவாடியில் தோண்டி புதைக்க திட்டமிட்டதாகவும், ஆனால் அங்கு ஆட்கள் நடமாட்டம் அதிகமாக இருந்ததால் உடலை அங்கே போட்டுவிட்டு சென்றுவிட்டதாகவும் கைதான அந்த இளஞ்சிறார் விசாரணையின்போது தெரிவித்தாக போலீசார் தெரிவித்து உள்ளனர். தூத்துக்குடியில் மகனே தந்தையை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!