Bjp State Vice President Interview கூட்டணி தேவை என்றால் கட்சி மேலிடம் முடிவு செய்யும்: பாஜக மாநில துணைத் தலைவர் பேட்டி
தூத்துக்குடியில் பாஜக மாநில துணைத் தலைவர் சசிகலா புஷ்பா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
Bjp State Vice President Interview
தூத்துக்குடியில் உள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்த பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத் தலைவர் சசிகலா புஷ்பா கூறியதாவது:
சமீபத்தில் ஒடிசாவில் காங்கிரஸ் எம்பி தீரஜ் சாஹீவின் வீடு மற்றும் கம்பெணி ஆகியவைகளில் நடைபெற்ற வருமானவரி சோதனையில் 300 கோடிக்கு மேல் ரொக்கப் பணம் எடுக்கப்பட்டது என்பது இந்தியாவையே உலுக்கி உள்ளது.
அதைபோல் இந்திய வரலாற்றில் வருமான வரி சோதனையில் அதிகபடியான பணம் எடுத்திருப்பது என்பது இதுதான். ஒருபக்கம் பிரதமர் மோடி இந்தியாவில் உள்ள கருப்பு பணத்தை மீட்டு மக்களுக்கு தருவேன் என போராடி வரும் நிலையில் இதுபோன்ற கருப்பு பணத்தை பதுக்கி வைத்திருப்பது என்பது காங்கிரஸ் கொள்ளைக்கார கட்சியா அல்லது கருப்பு பணத்தை உலவவிடும் கட்சியா என மக்கள் மத்தியில் கேள்வி எழும்பி உள்ளது.
இரண்டு முறை மக்களவை தேர்தலில் தோல்வியடைந்த தீரஜ் சாஹீவினுக்கு காங்கிரஸ் கட்சி மூன்று முறை ராஜ்யசபா எம்பி பதவி கொடுத்தது எதற்காக இதுபோல் கருப்பு பணத்தை ஒழிக்கவா? ஒரு நாடாளுமன்ற உறுப்பினர்கிட்டயே இவ்வளவு கோடி பணம் இருந்தால் அனைத்து காங்கிரஸ் எம்பி-க்களிடமும் எவ்வளவு கோடி இருக்கும் என பார்க்க வேண்டும். யார் தவறு செய்தாலும் பாரதிய ஜனதா கட்சி பார்த்துகொண்டு இருக்காது.
விரைவில் 2-ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு வரும். நாங்கள் இப்போது யாருடனும் கூட்டணியில் இல்லை. கூட்டணி தேவை என்றால் மேலிடம் முடிவு செய்யும். சென்னை மழை வெள்ளத்தில் அரசு செல்ல முடியாத இடத்திற்கு சென்று சேவை செய்தது பாரதிய ஜனதா கட்சியினர்தான். சேவை செய்வதற்காகவே உருவான கட்சி என்றால் அது பாரதிய ஜனதா கட்சிதான் என்று சசிகலா புஷ்பா தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu