தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த இருந்த பீடி இலைகள் பறிமுதல்

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த இருந்த பீடி இலைகள் பறிமுதல்
X

தூத்துக்குடி அருகே கடலில் படகில் கடத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த பீடி இலை மூட்டைகள்.

தூத்துக்குடியில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு கடத்த இருந்த 40 மூட்டை பீடி இலைகளை கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.

இலங்கையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி நிலைக்குப் பிறகு தமிழகத்தில் இருந்து கடல் வழியாக கஞ்சா, புகையிலைப் பொருட்கள், உரம், சமையலுக்கு பயன்படுத்தப்படும் மஞ்சள், பீடி இலைகள் உள்ளிட்ட பொருட்கள் அதிகளவு கடத்தப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, தமிழக கடலோர பகுதிகளில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார், கியூ பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், கடற்கரை கிராம இளைஞர்களும் இந்த கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், தூத்துக்குடியில் இருந்து நாட்டுப்படகு மூலம் இலங்கைக்கு பீடி இலை மூட்டைகள் கடத்தப்படுவதாக தூத்துக்குடி கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து கியூ பிரிவு ஆய்வாளர் வனிதா தலைமையிலான போலீசார் தருவைகுளம் கடற் பகுதிக்கு படகில் சென்று சோதனை செய்தனர்.

அப்போது கியூ பிரிவு போலீசாரை கண்டதும் படகில் பீடி இலை பண்டல்களுடன் இலங்கைக்கு கடத்த முயன்ற கும்பல் கடலில் குதித்து தப்பி ஓடியது. இந்த காட்சிகள் வெளியான நிலையில் இந்த சம்பவத்தை தொடர்ந்து மீண்டும் அதே தருவைகுளம் கடற்பகுதி வழியாக இலங்கைக்கு பீடிஇலை கடத்துவதாக கியூ பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதைஅடுத்து மீண்டும் கியூ பிரிவு போலீசார் தருவைகுளம் கடற் பகுதிக்கு சென்று சோதனை செய்தனர் அப்போது இலங்கைக்கு கடத்த இருந்த 40 மூட்டை பீடி இலை பண்டல்களை பறிமுதல் செய்ததுடன் பீடி இலையை கடத்தி கொண்டு வந்த மினி வேனையும் பறிமுதல் செய்தனர்.

இதைத்தொடர்ந்து கியூ பிரிவு போலீசார் பீடிஇலை கடத்தலில் ஈடுபட்டது யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
வருச கணக்கில் குழந்தை இல்லையா...? இந்த பழத்தை சாப்பிட்டு பாருங்க...! அவ்ளோ பயன்...!