தூத்துக்குடி மாவட்ட காவல் துறையில் பயன்படுத்தப்பட்ட 16 வாகனங்கள் ஏலம்
மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமையில் பொது ஏலம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட காவல் துறையில் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் மற்றும் காவல் துறையால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஆண்டுதோறும் பொது ஏலம் விடப்படுவது வழக்கம். அதன்படி, தூத்துக்குடி மாவட்டக் காவல் துறையில் பயன்படுத்தப்பட்ட 16 வாகனங்களுக்கான பொது ஏலம் இன்று நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 9 இருசக்கர வாகனங்கள் மற்றும் 7 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 16 வாகனங்கள் எந்த நிலையில் உள்ளதோ அதே நிலையில் தூத்துக்குடி கோரம்பள்ளம் மாவட்ட காவல் அலுவலகம் முன்பு உள்ள மைதானத்தில் வைத்து பொது ஏலம் விடப்பட்டது.
இந்த ஏலத்தின்போது, குழு உறுப்பினர்கள் தூத்துக்குடி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கோடிலிங்கம், ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் புருஷோத்தமன், தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலர் விநாயகம், அரசு தானியங்கி பணிமனை பொது மேலாளர் சந்திர பிரகாஷ், ஆயுதப்படை உதவி ஆய்வாளர் வெங்கடேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.
ஏலம் விடப்பட்ட வாகனங்களை பொதுமக்கள் நேற்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பார்வையிட்டனர். மேலும், ரூபாய் 2000 முன்பணமாக செலுத்தி தங்களது பெயர்களை பதிவு செய்து கொண்டவர்கள் மட்டுமே ஏலத்தில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.
ஏலம் முடிந்ததும் அதில் கலந்து கொண்டவர்கள் வாகனத்துக்கான முழுத்தொகை மற்றும் அதற்குண்டான சரக்கு மற்றும் சேவை வரி 18 சதவீதத்தொகை என முழுவதையும் அரசுக்கு ரொக்கமாக செலுத்தி வாகனத்தினை பெற்றுக் கொண்டு சென்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu