தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகத்தின் புதிய முயற்சிக்கு குவியும் பாராட்டுக்கள்
தூத்துக்குடி மாநகராட்சி பொருட்கள் சேகரிப்பு மையத்தை கனிமொழி எம்.பி. பார்வையிட்டார்.
தூத்துக்குடி மாநகாரட்சி நிர்வாகத்தில் சீர்மிகு நகரம் திட்டத்தின் கீழ் 1000 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, நவீன வசதிகள் கொண்ட பேருந்து நிலையம், அறிவியல் பூங்கா, கோளரங்கம், பூங்கா வசதிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்த நிலையில், ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் தூத்துக்குடி மாநகராட்சி அலுவலக வளாகத்தில் ஏற்கெனவே சோதனை முயற்சியாக பொதுமக்கள் தாங்கள் பயன்படுத்திய மற்றும் பயன்படுத்தாத பொருட்களை தேவைப்படுவோருக்கு வழங்கும் ஒரு புதிய தொலைநோக்குத் திட்டத்தை தொடங்கி இருந்தனர்.
அதாவது, ஏழை மக்களுக்கு எதுவும் எளிதாக கிடைக்காது என்ற நிலையில், வசதி படைத்தோர் தாங்கள் பயன்படுத்திய பொருட்களில் தற்போது பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள பொருட்கள் இருந்தால் அவற்றை மாநகராட்சி நிர்வாகம் ஒதுக்கி வைத்துள்ள இடத்தில் வைத்து விட வேண்டும். அதேபோல, ஏதேனும் பொருட்கள் தேவைப்படுவோர் அந்த இடத்துக்குச் சென்று தேவையான பொருட்கள் இருந்தால் எடுத்துக் கொள்ளலாம் என்பதே இந்தத் திட்டத்தின் நோக்கம் ஆகும்.
ஏழை மக்களுக்கு ஏதேனும் உதவி செய்ய விரும்புவோர் தங்களால் இயன்ற அளவு பொருட்களை வாங்கி இந்த இடத்தில் வைத்தாலும் அதை தேவைப்படுவோர் எடுத்துக் கொண்டு பயன்படுத்த உதவியாக இருந்து வந்தது. இந்த நிலையில், மாநகராட்சி நிர்வாகத்தின் அந்த முயற்சியினால் மாநகர் மக்கள் பலர் பயன் பெற்றனர்.
இதன் தொடர்ச்சியாக அந்த திட்டத்தை நிரந்தரமாக்கும் வகையில், "தேவையில்லாதோர் வைத்திடுக தேவைப்படுவோர் எடுத்திக" என்ற முன்னெடுப்பை மாநகராட்சி நிர்வாகம் தொடங்கி உள்ளது. இந்தத் திட்டத்தை இன்று பார்வையிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி சில பொருட்களை வழங்கினார்.
இதுகுறித்து மாநகாரட்சி மேயர் ஜெகன் பெரியசாமி கூறியதாவது:-
தூத்துக்குடி மாநகர மக்கள் தாங்கள் பயன்படுத்திய பொருட்களில் மற்றவர்களுக்கு தேவைப்படும் உபயோகமான மீண்டும் பயன்படுத்தக்கூடிய புத்தகங்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பயன்படுத்தும் வகையிலான பேக்குகள், சீருடைகள், போர்வைகள், காலனிகள், பாத்திரங்கள், பொம்மைகள், பிளாஸ்டிக் பொருட்கள், மின் சாதன பொருட்கள் ஆகியவற்றை இந்த மையத்தில் வைத்திடலாம்.
அந்த பொருட்களை தேவைப்படுவோர் தூத்துக்குடி மாநகராட்சி அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள இந்த மையத்திற்கு வந்து பெற்று கொள்ளலாம் என மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார். தூத்துக்குடி மாநகாரட்சி நிர்வாகத்தின் இந்த புதிய முயற்சிக்கு பல்வேறு சமூக அமைப்பினர், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்து உள்ள்னர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu