தூத்துக்குடியில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வார உறுதிமொழி ஏற்பு

தூத்துக்குடியில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வார உறுதிமொழி ஏற்பு
X

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தலைமையில் அதிகாரிகள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வார உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் அனைத்து அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வார உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வார உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தலைமையில் இன்று நடைபெற்றது.

நிகழ்ச்சியின்போது, நமது நாட்டின் பொருளாதாரம், அரசியல் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு ஊழல் ஒரு முக்கிய தடையாக உள்ளதாக நான் நம்புகிறேன். அரசு, குடிமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆகியவை ஊழலை ஒழிப்பதற்கு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என நான் நம்புகிறேன். நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் எப்போதும் உயர்ந்த நோக்குடன் விழிப்புணர்வு, நேர்மை மற்றும் கண்ணியம் ஆகியவற்றுடன் ஊழலை ஒழிப்பதில் உறுதுணையாக விளங்க வேண்டும் என்பதை நான் நன்கு அறிவேன்.

எனவே, நான் அனைத்து செயல்களிலும் நேர்மையையும், சட்ட விதிகளையும் பின்பற்றுவேன் என்றும், லஞ்சம் வாங்கவோ அல்லது கொடுக்கவோ மாட்டேன் என்றும், அனைத்து செயல்களையும் நேர்மை மற்றும் வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுத்துவேன் என்றும், பொதுமக்களின் நலனுக்காகப் பணியாற்றுவேன் என்றும், தனிப்பட்ட நடத்தையில் நேர்மையை வெளிப்படுத்துவதில் ஒரு முன்னுதாரணமாக செயல்படுவேன் என்றும், ஊழல் தொடர்பான நிகழ்வினை உரிய அதிகார அமைப்பிற்குத் தெரியப்படுத்துவேன் என்றும் உறுதி கூறுகிறேன் என்று மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தலைமையில் அலுவலர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா உட்பட அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!