தூத்துக்குடி அருகே மண் தரையில் அமர்ந்து படிக்கும் அங்கன்வாடி மைய குழந்தைகள்

தூத்துக்குடி அருகே மண் தரையில் அமர்ந்து படிக்கும் அங்கன்வாடி மைய குழந்தைகள்
X

தூத்துக்குடி அருகே மரத்தடியில் தரையில் அமர்ந்து படிக்கும் அங்கன்வாடி மைய குழந்தைகள்.

தூத்துக்குடி அருகே அங்கன்வாடி கட்டிடம் சேதமான நிலையில், குழந்தைகள் மரத்தடியில் அமர்ந்து கல்வி கற்கும் நிலை உள்ளது.

தூத்துக்குடி அருகே உள்ளது தருவைகுளம் மீனவ கிராமம். ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இந்த கிராமத்தில் காமராஜர்நகர் பகுதியில் அமைந்துள்ள அங்கன்வாடி மைய கட்டிடம் கடந்த ஓராண்டுக்கு முன்பு சேதமாகி கீழே இடிந்து விழும் நிலை ஏற்பட்டது.

அந்தப் பகுதி மக்கள் தங்கள் குழந்தைகளை அங்கன்வாடி மையத்துக்கு அனுப்ப அச்சமடைந்ததால் அங்கன்வாடி மைய கட்டிடம் பூட்டப்பட்டு அங்கு கல்வி பயின்ற குழந்தைகள் அருகே உள்ள பகுதியில் தற்காலிகமாக வாடகை. கட்டிடமான ஓட்டு கட்டிடத்தில் நடைபெற்று வருகிறது.

இருப்பினும், அந்த தற்காலிக வாடகை கட்டிடத்தில் உள்ளே அமர்ந்து குழந்தைகள் அமர்ந்து கல்வி கற்க முடியாத நிலை ஏற்பட்டதை தொடர்ந்து கட்டிடம் அருகே உள்ள மண் தரையில் மரத்தடியில் அமர்ந்து குழந்தைகள் கல்வி கற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

சுமார் 30 குழந்தைகள் இந்த அங்கன்வாடி மையத்திற்கு வந்த நிலையில் மண் தரையில் அமர்வதால் குழந்தைகள் மணலில் விளையாடி நோய் பரவும் அபாயமும் காற்று நேரங்களில் மரங்கள் சாய்ந்து கீழே விழுந்து குழந்தைகள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலையும் இருப்பதால் ஏராளமான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அங்கன்வாடி மையத்திற்கு அனுப்பாமல் உள்ளனர்

இந்நிலையில் 20-க்கும் குறைவான குழந்தைகள் மட்டுமே வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த அங்கன்வாடி மைய கட்டிடம் சேதமாகி ஓராண்டாகியும் கட்ட நடவடிக்கை எடுக்காத நிலை உள்ளது. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் கட்டுப்பாட்டில் வரும் அங்கன்வாடி மையம் வருவதால் அமைச்சர் இதில் கவனம் செலுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மரத்தடியில் தரையில் அமர வேண்டிய உள்ள காரணத்தினால் குழந்தைகளை அனுப்ப அச்சப்படும் பெற்றோர் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!