அமுதகவி உமறுப்புலவர் பிறந்தநாள் விழா: அமைச்சர் கீதாஜீவன் மரியாதை
அமுதகவி உமறுப்புலவரின் மணிமண்டபத்தில் அமைச்சர் கீதாஜீவன் தலைமையில், மலர்போர்வை வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.
அமுதகவி உமறுப்புலவர் அவர்களின் 381 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் அமைந்துள்ள அமுதகவி உமறுப்புலவர் மணிமண்டபத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் நலத்துறை அமைச்சர் கீதாஜீவன், மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் ஆகியோர் மலர்போர்வை வைத்து மரியாதை செலுத்தினர்.
அதனை தொடர்ந்து அமுதகவி உமறுப்புலவரின் வாரிசுதாரரான காஜா மைதீனுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர். நிகழ்ச்சியில், எட்டயபுரம் பேரூராட்சி மன்றத்தலைவர் ராமலட்சுமி, கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் ஜேன் கிறிஸ்டி பாய், எட்டயபுரம் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் கதிர்வேல், எட்டயபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணியன், அமுதகவி உமறுப்புலவரின் வாரிசுதாரரும் - உமறுப்புலவர் ஜமாத் தலைவருமான . காஜாமைதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அமுதகவி உமறுப்புலவர் அவர்களின் வாழ்க்கை வரலாறு:
கி.பி.1640 ஆம் ஆண்டில் அரபு தேசத்தில் இருந்து வாசனைத் திரவிய வியாபாரியாக எட்டையபுரம் வந்த சேகுமுகமது
அலியார் எட்டையபுரம் மன்னர் அரன்மனையில் பணிபுரிந்தார். அதுசமயம் கி.பி 1642 இல் சந்திர ஆண்டு உமறுப்புலவர் பிறந்தார். திண்ணைப் பள்ளியில் ஏட்டுப்படிப்பு ஆரம்பக் கல்வி பயின்ற உமறு அதன்பின் அரசவைப்புலவர் கடிகைமுத்துப் புலவரிடம் சேர்ந்து இலக்கண, இலக்கிய காவிநிகண்டு பயின்று முதன்நிலை மாணவரானார்.
எட்டையாபுரம் மன்னரின் அரசவையில் ஆணவத்துடன் வாதுபுரிய வந்த வாலைவாருதியை எதிர்கொள்ள அரசவைப்புலவர் கடிகை முத்துப்புலவர் உள்பட அனைவரும் தயங்கியபோது, துணிந்து முன்வந்து இறையருட் கவிபாடி வடபுலவன் வாலைவாருதியை உமறுவென்றார்.
உமறுவின் ஆற்றலைப் பாராட்டிய மன்னர் அன்றுமுதல் அரசவைப்புலவராக நியமித்தார். கீழக்கரை கொடை வள்ளல் சீதக்காதி மரைக்காயர் வணிகநிமித்தமாக எட்டையாபுரம் மன்னரைக் காண அரசவைக்கு வந்தபோது அமுதகவி அரசு உமறுப்புலவரின் ஆற்றும் திறன் கண்டு, முகமது நபி வாழ்க்கையை சீறாப்புராணமாக எழுத உமறுப்புலவரை தன்னுடன் கீழக்கரைக்கு அழைத்துச் சென்றார்.
கல்விக்கடல் மகான் சதக்கத்துல்லா அப்பா இடம் உரைபெற்று இறையருளால் முகமது நபி நல்லாசியுடன்சீறாப்புராணம் எழுத ஆரம்பித்தார். இடையே எதிர்பாராது வள்ளல் மரணமடைய அவரது மைத்துனர் அபுல் காசிம் மரைக்காயர் தன்னுடன்
உமறுப்புலவரை பரங்கிப்பேட்டை அழைத்துப்போய் பின்னர் சிறப்புடன் சீறாப்புராணம் எழுதி முடிக்கப்பட்டு பரங்கிப்பேட்டையிலேயே அரங்கேற்றம் நடத்தப்பட்டது.
இறைநாட்டம் செயற்கரிய சீறாப்புராணம் காவியத்தை சிறப்பாக எழுதிமுடித்து அரங்கேற்றமும் முடித்தபின் எட்டையாபுரம் திரும்பிய உமறுப்புலவர் சிறிது வாழ்க்கைக்குப் பின் கி.பி. 1703-இல் எட்டையபுரத்தில் இறந்து நல்லடக்கமானார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu