நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி? ஜனவரியில் அறிவிக்கிறது தேமுதிக!
தூத்துக்குடி விமான நிலையத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேட்டியளித்தார்.
தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் தேமுதிக பொருளாளர் விஜயகாந்த் தூத்துக்குடி வந்தார். பின்னர், தூத்துக்குடி விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தென் மாவட்டங்களில் நடைபெறும் கொலை சம்பவங்கள் மனதுக்கு வேதனையான விஷயமாக உள்ளது. தூத்துக்குடியில் கிராம நிர்வாக அலுவலர் படுகொலை செய்யப்பட்ட போது வீட்டிற்கு வந்து ஆறுதல் கூறினேன். தற்போது விமானத்தில் வரும் போது கனிம வள கொள்ளை மிகப்பெரிய அளவில் நடந்து கொண்டிருக்கிறது என தெரியவந்தது. கொலைகள் நடைபெறுவதற்கு முக்கியமான காரணமும் அதுதான்.
தீபாவளி அன்று டாஸ்மாக் வருவாய் 500 கோடி அளவில் விற்பனையாகிறது. இதை விட ஒரு தலை குனிவு வேறு ஒன்றும் இல்லை. ஆட்சிகள் மாறினாலும், காட்சிகள் மாறவில்லை. சென்னை முழுவதும் தண்ணீர் தேங்கி நிற்கின்றது. குண்டும் குழியுமான சாலைகள் உள்ளன. சுகாதாரமும் கிடையாது. இதற்கு முன்னர் மழை பெய்துவிட்டது என்றால் ஸ்டாலின் ஒரு ஷூ மாட்டிக் கொண்டு கரெக்ட்டா சுத்திட்டு போயிடுவார்.
உதயநிதி ஒருத்தர் தான் நீட் தேர்வு விவகாரத்தை பிடித்துக் கொண்டிருக்கிறார். இந்தியா முழுக்க நீட் ஒழிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெளிவாக சொல்லியிருக்கிறது. எந்த பெண்ணாவது ஆயிரம் மாதம் கொடுங்கள் என்று கேட்டார்களா? எந்த பெண்ணும் கேட்கவில்லை.
மதம், ஜாதி மற்றும் உணவு பழக்கம் பற்றி யாரும் பேசக்கூடாது. அவரவர்களுக்கு ஒரு கலாச்சாரம் உள்ளது. 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி, எந்த தொகுதி, எத்தனை வேட்பாளர் என்பதை அதிகாரப்பூர்வமாக கட்சியின் நிறுவனத் தலைவர் விஜயகாந்த் ஜனவரி மாதம் அறிவிப்பார் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu