விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் டிச.24ம் தேதி நடக்கிறது : மாவட்டஆட்சியர் தகவல்

விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் டிச.24ம் தேதி நடக்கிறது : மாவட்டஆட்சியர் தகவல்
X

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் வருகிற 24ம் தேதி நடைபெற உள்ளது.

இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, தூத்துக்குடி மாவட்டத்திற்கு டிசம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் காணொலிக்காட்சி மூலம் டிசம்பர் 24ம் நாள் காலை 11மணியளவில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. அதில் விவசாயிகள் தங்கள் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் இருந்து காணொலிக்காட்சி வழியே பங்கேற்றுப் பயனடையலாம்.

விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்க விரும்பும் விவசாயிகள் தங்கள் வட்டார உதவி இயக்குநர் அலுவலகத்தில் பதிவு செய்து கொண்டு டிசம்பர் 24 அன்று காணொலிக் காட்சி மூலம் தங்கள் குறைகளைத் தெரிவிக்கலாம். தங்கள் கோரிக்கை மனுக்களை டிசம்பர் 24 அல்லது அதற்கு முன்னதாக தங்கள் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்கலாம்.அவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூலம் பெறப்பட்டு, உரிய துறைகளுக்கு அனுப்பப்பட்டு அவர்களிடமிருந்து உரிய பதில் விவசாயிகளுக்கு அனுப்பிவைக்கப்படும்.எனவே, விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!