அ.தி.மு.க. பொன்விழா எழுச்சி மாநாடு ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்ச்சி
தூத்துக்குடியில் அதிமுக பொன்விழா மாநாடு குறித்து ஆட்டோவில் போஸ்டர் ஒட்டுகிறார் முன்னாள் அமைச்சர் சண்முகநாதன்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொன்விழா எழுச்சி மாநாடு ஆகஸ்ட் 20 ஆம் தேதி மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இந்த பொன்விழா மாநாடு குறித்து பொதுமக்கள் மத்தியில் தெரியப்படுத்தும் வகையில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பேருந்துகள், கார்கள், ஆட்டோக்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் பொன்விழா மாநாடு குறித்த ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்ச்சி தூத்துக்குடி டூவிபுரத்தில் நடைபெற்றது.
இதில் முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. தெற்கு மாவட்டச் செயலாளருமான சண்முகநாதன், அமைப்புச் செயலாளர் சின்னத்துரை ஆகியோர் கலந்து கொண்டு வேன், கார், ஆட்டோ, மற்றும் அரசு பேருந்துகளில் பொன்விழா மாநாடு குறித்த ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்ச்சியை துவங்கி வைத்தனர்.
தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி வந்த பிறகு இன்று 2 கோடியே 30 லட்சத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களை அ.தி.மு.க.வில் இணைத்து உலகில் ஏழாவது பெரிய கட்சியாக உருவாக்கித் தந்துள்ளார். ஆகையினால் மதுரையில் நடைபெறும் பொன்விழா மாநாடு பெரிய வெற்றி பெறும்.
இந்த பொன்விழா மாநாடு வெற்றிபெறும் போது தமிழகத்தில் ஆளுங்கட்சி மற்றும் தூத்துக்குடி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி எம்பி ஆகியோர் இருக்கும் இடம் தெரியாமல் போய்விடுவார்கள். மேலும் தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும்.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் எப்போது வந்தாலும் அதிமுக வெற்றி பெற்று எடப்பாடி பழனிச்சாமி தான் தமிழகத்தின் முதல்வராக இருப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu