விரைவில் மீன்வளம், கால்நடை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
தூத்துக்குடி மாவட்டம், செக்காரக்குடியில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்தார்.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு அருகே உள்ள செக்காரக்குடியில் கால்நடை மருத்துவ முகாம் மற்றும் கருத்தரங்கம் நடந்தது. இந்த முகாமில், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு முகாமை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து கால்நடைத்துறை சார்பில் வைக்கப்பட்டிருந்த கண்காட்சிகளை பார்வையிட்டு அதன் விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் நடந்த நிகழ்ச்சியை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். செக்காரக்குடி பகுதியில் அதிகமாக விவசாயப்பணிகள் மேற்கொண்டவர்களுக்கும், பால்பண்ணையில் அதிகமாக பால் ஊற்றியவர்களுக்கும் சிறப்பு பரிசுகளை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று முதல் தமிழகம் முழுவதிலும் 100 இடங்களில் இந்த கால்நடை மருத்துவமுகாம் நடைபெறுகிறது. கால்நடை பல்கலைக்கழகம் மற்றும் மீன்வள பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை தொடர்பான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும். தூத்துக்குடியில் ஜல்லிகட்டு நடத்துவது குறித்து ஆலோசனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
தமிழகத்தில் உள்ள மீன்வளப் பல்கலைக்கழகம் மற்றும் கால்நடைப் பல்கலைக்கழங்களுக்குள்பட்ட கல்வி நிலையங்களில் மீன்வள படிப்புகள் மற்றும் கால்நடைப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்ட நிலையில், அனைத்து படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு மூடம் நடத்தப்படுவது வழக்கம். அமைச்சர் அறிவிப்புக்குப் பிறகு மாணவர் சேர்க்கை குறித்த விவரம் விரைவில் அறிவிக்கப்பட்டு சேர்க்கை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu