தூத்துக்குடி பண்ணை பசுமை நுகர்வோர் அங்காடியில் கூடுதல் பதிவாளர் ஆய்வு

தூத்துக்குடி பண்ணை பசுமை நுகர்வோர் அங்காடியில் கூடுதல் பதிவாளர் ஆய்வு
X

தூத்துக்குடி பண்ணை பசுமை நுகர்வோர் அங்காடியில் கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் விஜயராணி ஆய்வு மேற்கொண்டார்.

தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் பண்ணை பசுமை நுகர்வோர் அங்காடியில் கூட்டுறவு சங்கங்க ளின் கூடுதல் பதிவாளர் ஆய்வு செய்தார்

கூட்டுறவுத் துறையில் கட்டுப்பாட்டில் உள்ள தூத்துக்குடி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மூலம், தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே பண்ணை பசுமை நுகர்வோர் அங்காடி செயல்பட்டு வருகிறது.

விவசாயிகளிடம் இருந்து காய்கறிகள் மற்றும் பழங்கள் நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டு இந்த அங்காடியில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், காய்கறிகள், பழங்கள் ஆகியவை தரமாகவும், நியாயமான விலையிலும் கிடைப்பதால் பொதுமக்கள் ஏராளமானோர் தினமும் இங்கு குவிந்து பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.

இந்த நிலையில், தூத்துக்குடி பண்ணை பசுமை நுகர்வோர் அங்காடியில் தமிழக கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் (நுகர்வோர் பணிகள்) விஜயராணி இன்று திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், தூத்துக்குடி மண்டல கூட்டுறவுத் துறையின் கீழ் அதே பகுதியில் செயல்படும் கூட்டுறவு மருந்தகம், பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை நிலையத்தினையும் அவர் ஆய்வு மேற்கொண்டு கூட்டுறவு நிறுவனம் தொடர்ந்து இலாபத்தில் இயங்கிட அறிவுரை வழங்கினார்.

தொடர்ந்து, தூத்துக்குடி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தால் நடத்தப்பட்டு வரும் டூவிபுரம் நியாய விலை கடையினை ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களுக்கு புகார் ஏதுமின்றி விற்பனை மேற்கொள்ள கூடுதல் பதிவாளர் விஜயராணி அறிவுரை வழங்கினார்.

மேலும் மதுரா கோட்ஸ் கூட்டுறவு பண்டகசாலை மூலம் நடத்தப்பட்டு வரும் சுயசேவைப் பிரிவு அங்காடியை ஆய்வு மேற்கொண்டு விற்பனையினை அதிகரித்திட அதிகாரிகளுக்கு கூடுதல் பதிவாளர் அறிவுரை வழங்கினார். இந்த ஆய்வின்போது, தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப் பதிவாளர் மற்றும் செயலாட்சியர் நடுக்காட்டுராஜா, துணைப் பதிவாளர் (பொது விநியோகத் திட்டம்) மாரியப்பன், தூத்துக்குடி சரக துணைப் பதிவாளர் ரவீந்திரன் மற்றும் திருச்செந்தூர் சரக துணைப் பதிவாளர் சந்திரா உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா