கடலோர காவல் படையில் மீனவர்களை சேர்க்க நடவடிக்கை: தமிழக ஆளுநர் உறுதி

கடலோர காவல் படையில் மீனவர்களை சேர்க்க நடவடிக்கை: தமிழக ஆளுநர் உறுதி
X

தூத்துக்குடியில் நடைபெற்ற உலக மீனவர் தினத்தில் ஆளுநர் ஆர்.என். ரவி பேசினார்.

கடலோர காவல் படையில் மீனவர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்தார்.

தேசிய பாரம்பரிய மீனவர்கள் கூட்டமைப்பு சார்பில், உலக மீனவர் தின விழா தூத்துக்குடியில் நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு சுதந்திர போராட்ட தியாகிகளின் மீனவ பிள்ளைகளுக்கு விருதுகள், மீனவ ஆளுமைகள் விருது மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் விருதுகள் ஆகியவைகளை வழங்கி கௌரவித்தார்‌.

தொடர்ந்து, மீனவர்களிடம் குறைகளை கேட்டறிந்து ஆளுநர் ஆர்.என். ரவி பேசியதாவது:

உலக மீனவர் தினத்தில் மீனவர்களுடன் கலந்துகொண்டதில் எனக்கு மிகவும் சந்தோசத்தை தருகின்றது. இரண்டு மாதத்திற்கு முன்னால் செப்டம்பர் 21 ஆம் தேதி மீனவர்களிடம் குறைகளை கேட்டறிந்தேன் குறைகளை கேட்ட உடன் மத்திய அரசிடம் உடனடியாக தெரிவித்தேன்.

மேலும், தனிப்பட்ட முறையில் மத்திய மீன்வளத்துறை அமைச்சரை சந்தித்து மீனவர்களின் பிரச்னைகள் குறித்தும் கூறினேன். நம்பிக்கையாக சொல்கின்றேன் மீனவர்கள் வைத்த கோரிக்கையை நான் நிறைவேற்றி தருவேன். நமது மீனவர்கள் தேசத்தின் வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருக்கின்றார்கள்.

மீனவர்கள் தங்கள் உயிரை பனய வைத்து கடலில் மீன்பிடித்து மக்களுக்கு சத்தான மீன்களை கொடுக்கின்றனர். மீனவர்களே நாட்டின் முதல் பாதுகாவலர்கள் ஆவார்கள். நமது இந்திய தேசம் மிகபெரிய கடல் பரப்பை கொண்டதாக உள்ளது. நாட்டினை பாதுகாக்க எவ்வளவு படைகள் இருந்தாலும் கடலை பாதுகாக்க மீனவர்களே உள்ளனர். கடலோர பாதுகாப்பு படையில் மீனவ இளைஞர்கள் பங்குபெற வேண்டும்.

மற்ற மாநிலங்களை பார்க்கும்போது கடலில் நீச்சல் கூட அடிக்ககூட முடியாதவர்கள்தான் இருக்கின்றார்கள். ஆனால் நமது மீனவர்கள் அப்படி இல்லை மிகவும் திறமையானவர்கள். கடலோர காவல்படையில் மீனவ இளைஞர்களை சேர்க்க மத்திய அரசிடம் வலியுறுத்துவேன். ஏனென்றால் அவர்களால்தால் கடலை காப்பாற்ற முடியும்.

மீனவ சமுதாயத்தில் சரியான பிரதிநிதிதுவம் இல்லாததால் சட்டமன்றம், நாடாளுமன்றம், உள்ளாட்சிகளில் பின்னடைந்து வருகிறது. பிரதமர் மீனவர்களுக்கு செய்ய வேண்டிய அனைத்தையும் செய்ய வேண்டும் என உத்தரவு போட்டுள்ளார்.


நான் பாரத பிரதமரிடம் பேசும்போதெல்லாம் பிரதமர் மீனவர்களை பற்றிதான் அதிகம் பேசுவார். மத்திய அரசு அறிமுகபடுத்திய மீனவர் மேம்பாட்டு திட்டம் வருங்காலத்தில் மிகபெரிய வளர்ச்சிய அடையும். மீனவர்களின் கோரிக்கைகளை கேட்க என்னுடைய கதவு எப்போதும் திறந்து இருக்கும் என ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்தார்.

தொடர்ந்து, தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்திற்கு சென்ற தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு பாத்திமாநகர் பங்கு தந்தை ஏசுதாசன் பனிமய மாதா உருவம் கொண்ட புகைப்படத்தை பரிசாக வழங்கினார். பின்னர் பனிமய மாதா முன்பு ஆளுநர் ஆர்.என். ரவி சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!