தூத்துக்குடி மாவட்ட காவல் துறையினர் 60 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்..!
தூத்துக்குடியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் காவல் துறையின் அணிவகுப்பு மரியாதையை ஆட்சியர் செந்தில்ராஜ் ஏற்றுக் கொண்டார்.
நாட்டின் 77 ஆவது சுதந்திர தின விழா தூத்துக்குடி தருவை மைதானத்தில் இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். மேலும், மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினர் 60 பேருக்கு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.
மாவட்டத்தில் பாராட்டுச் சான்றிதழ் பெற்ற காவல் துறை அதிகாரிகள் விவரம் வருமாறு:
தூத்துக்குடி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கோடிலிங்கம், தூத்துக்குடி ஊரக காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ், திருச்செந்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் வசந்தராஜ், நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் சம்பத் ஆகியோருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
கோவில்பட்டி மேற்கு குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் சுகாதேவி, எட்டையாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் ஜின்னா பீர்முகமது, விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் விஜயலட்சுமி, மாவட்ட குற்றப் பிரிவு பிரிவு காவல் ஆய்வாளர் அந்தோணியம்மாள், கோவில்பட்டி கிழக்கு குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் மங்கையற்கரசி, போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளர் மயிலேறும் பெருமாள் ஆகியோருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முகிலரசன், ஆத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் செல்வகுமார், சாயர்புரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் தேவசகாயம், கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் அரிக்கண்ணன், மாவட்ட குற்றப் பிரிவு உதவி ஆய்வாளர் அனிதா, மாவட்ட தொழில்நுட்ப பிரிவு உதவி ஆய்வாளர் ஆறுமுகம், மாவட்ட தனிவிரல் ரேகை பிரிவு உதவி ஆய்வாளர் பழனிசெல்வி ஆகியோருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் கல்பனா, செய்துங்கநல்லூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் தர்மர், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பிரெட்ரிக் ராஜன், தூத்துக்குடி உட்கோட்ட தனிப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் சேகர், முத்தையாபுரம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ஞானகுரு, தெர்மல்நகர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சங்கரலிங்கம், ஆயுதப்படை சிறப்பு உதவி ஆய்வாளர் கென்னடி ஆகியோருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
ஆத்தூர் காவல் நிலைய தலைமை காவலர் சொர்ணராஜ், பசுவந்தனை காவல் நிலைய தலைமை காவலர் ஜார்ஜ் கலைசெல்வம், கழுகுமலை காவல் நிலையம் (அயல்பணி- கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் முகாம் அலுவலகம்) தலைமை காவலர் வெங்கடேஷ், கோவில்பட்டி போக்குவரத்து பிரிவு தலைமை காவலர் ஸ்டீபன் இளையராஜா, மாவட்ட குற்ற ஆவண காப்பக பிரிவு தலைமை காவலர் வெங்கட சுப்பிரமணியன், மாவட்ட மோப்ப நாய் பிரிவு தலைமை காவலர் ஜோஸ்வா, மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு தலைமை காவலர் அருணாச்சலம், ஏரல் காவல் நிலைய தலைமை காவலர் காசி, கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்க பிரிவு தலைமை காவலர் தாமோதரன் ஆகியோருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
எட்டையாபுரம் காவல் நிலைய தனிப்பிரிவு தலைமை காவலர் செல்லசாமி, மாவட்ட தனிப்பிரிவு தலைமை காவலர்கள் அருணாச்சலசெல்வம் மற்றும் சங்கர், ஆத்தூர் காவல் நிலைய பெண் தலைமை காவலர் பொன் முத்துமாரி, தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய பெண் தலைமை காவலர் ஆரோக்கிய மைக்கேல் மெர்சி, ஓட்டப்பிடாரம் காவல் நிலைய பெண் தலைமை காவலர் ஆறுமுககனி ஆகியோருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
சிப்காட் காவல் நிலைய முதல் நிலை காவலர் ராஜசேகர் முறப்பநாடு காவல் நிலைய முதல் நிலை காவலர் சந்தானராஜ், ஏரல் காவல் நிலைய முதல் நிலை காவலர் ஆனந்த கணேஷ், தட்டார்மடம் காவல் நிலைய முதல் நிலை காவலர் அகஸ்டின் குமார், செய்துங்கநல்லூர் காவல் நிலைய தனிப்பிரிவு முதல் நிலை காவலர் சங்கரசுப்பு, மாவட்ட குற்ற ஆவண காப்பக பிரிவு முதல் நிலை காவலர் சண்முகம், சைபர் குற்றப்பிரிவு காவல் நிலைய முதல் நிலை காவலர் காளிதாஸ், விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய முதல் நிலை பெண் காவலர் சங்கீதா, சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு முதல் நிலை பெண் காவலர் மகேஸ்வரி, ஆயுதப்படை முதல் நிலை பெண் காவலர் கோமதி ஆகியோருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
தென்பாகம் போக்குவரத்து பிரிவு காவல் நிலைய காவலர் சுயம்புலிங்கம், புதூர் காவல் நிலைய காவலர்கள் சூரியகுமார் மற்றும் நவீன், சாத்தான்குளம் காவல் நிலைய காவலர் அருண்குமார், தாளமுத்துநகர் காவல் நிலைய காவலர் சுடலைமணி, கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய பெண் காவலர் திவ்யா, ஆயுதப்படை காவலர் உமாபதி ஆகியோருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
மாவட்ட காவல் அலுவலக அமைச்சுப்பணி உதவியாளர்கள் ராஜேஸ்வரி மற்றும் ஆவுடையப்பன், தூத்துக்குடி மாவட்ட ஊர்க்காவல்படை வீரர்கள் செல்வராஜ் மற்றும் செல்வகுமார் ஆகிய 60 காவல்துறையினருக்கு வழங்கப்பட்டது. பாராட்டு சான்றிதழ் பெற்ற காவல்துறையினருக்கு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பாராட்டுகளை தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu