தூத்துக்குடியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தியவர் கைது

தூத்துக்குடியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தியவர் கைது
X

பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களுடன் கைது செய்யப்பட்ட இசக்கிராஜா.

தூத்துக்குடியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்றவரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்றவரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவோரை கண்காணிக்க தனிப்படை அமைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவிட்டுள்ளார்.

இதன் தொடர்ச்சியாக, மாவட்டத்தில் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தொடர்ந்து கைது செய்யப்படுவோர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின்படி தூத்துக்குடி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சத்தியராஜ் மேற்பார்வையில், தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளர் மணிமாறன் தலைமையில் உதவி ஆய்வாளர் ராமலிங்கம் மற்றும் போலீசார் நேற்று வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.

தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆரோக்கியபுரம் பகுதியில் உள்ள மருத்துவமனை அருகே போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது, அந்த வழியாக சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த இருசக்கர நிறுத்தி சோதனை செய்தனர்.

சோதனையின்போது, தூத்துக்குடி ஆரோக்கியபுரம் பகுதியைச் சேர்ந்த தர்மராஜ் மகன் இசக்கிராஜா (32) என்பவர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சட்டவிரோத விற்பனைக்காக இருசக்கர வாகனத்தில் கடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து, இசக்கிராஜாவை கைது செய்த போலீசார் அவரிடமிருந்த 9,000 ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் மற்றும் கடத்துவதற்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!