தூத்துக்குடியில் ஏழை குடும்பத்துக்கு ரூ. 7 லட்சம் மதிப்பில் வீடு கட்டிக் கொடுத்த மறைமாவட்ட நிர்வாகம்!
தூத்துக்குடியில் ஏழை குடும்பத்திற்கு 7 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட வீட்டை கத்தோலிக்க மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் ஆண்டனி ஒப்படைத்தார்.
தூத்துக்குடியில் ஏழை குடும்பத்திற்கு 7 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட வீட்டை கத்தோலிக்க மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் ஆண்டனி ஒப்படைத்தார்.
தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு கத்தோலிக்க மறைமாவட்ட அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த மறைமாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு ஏழைகளுக்கு உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. இதற்கிடையே, தற்போது மறைமாவட்டத்தின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, தூத்துக்குடி மறைமாவட்ட நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு பல்வேறு நலத்திட்டங்களை மறை மாவட்டம் சார்பில் எழை எளியோர் பயன்பெறும் வகையில் வழங்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மாவட்டத்தில் வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் 15 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கான திருத்தூதர் தோமையார் இல்லம் என்ற பெயரில் வீடு கட்டும் பணி துவங்கப்பட்டு உள்ளது.
இதில் முதற்கட்டமாக தூத்துக்குடி அருகே உள்ள பண்டாரம்பட்டியில் உள்ள ரீத்தம்மாள் பகுதியை சேர்ந்த ஏழை எளிய பெண் வசந்தா என்றவருக்கு மறை மாவட்டம் சார்பில் 7 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக வீடு கட்டப்பட்டது. அந்த வீட்டை மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் இன்று சம்பந்தப்பட்ட வசந்தா குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி குத்துவிளக்கு ஏற்றி வீட்டை அர்ச்சிப்பு செய்து பயனாளியிடம் வீட்டை ஒப்படைத்தார். மேலும், வீட்டில் மாட்டி வைக்கும் வகையில் ஜீசஸ் படத்தை அவர் பரிசளித்தார். இந்த நிகழ்ச்சியில் வீடு கட்டும் குழு பங்குத்தந்தை கிராசியஸ் மைக்கேல், பண்டாரம்பட்டி பங்கு தந்தை அத்தனாசியஸ் ஜோ மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu