தூத்துக்குடியில் 200 கிலோ புகையிலைப் பொருட்களுடன் ஒருவர் கைது

தூத்துக்குடியில் 200 கிலோ புகையிலைப் பொருட்களுடன் ஒருவர் கைது
X

கைது செய்யப்பட்ட கார்த்திகேயன்.

தூத்துக்குடி அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை சட்டவிரோத விற்பனைக்காக காரில் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தல் மற்றும் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனை செய்யப்படுவதை தனிப்படை அமைத்து காவல் துறையினர் கண்காணித்து வருகின்றனர். மேலும், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வோர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின்படி, தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் மேற்பார்வையில், புதியம்புத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் வின்சென்ட் அன்பரசி மற்றும் உதவி ஆய்வாளர் ரவிக்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.


புதியம்புத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதியம்புத்தூர் பகுதியில் உள்ள ஒரு பள்ளி அருகில் தனிப்படை போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது, அந்த வழியாக சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர்.

சோதனையின்போது, அந்த காரில் மதுரை மாவட்டம் பாஸ்கரதாஸ்நகரை சேர்ந்த கார்த்திகேயன் (22) என்பவர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சட்டவிரோத விற்பனைக்காக காரில் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, தனிப்படை போலீசார் கார்த்திகேயனை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், கைதான கார்த்திகேயனிடம் இருந்த ரூபாய் 1,56,000 மதிப்புள்ள 200 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் கடத்துவதற்கு பயன்படுத்திய காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து புதியம்புத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது