தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் 420 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிப்பு

தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் 420 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிப்பு
X

தூத்துக்குடி அனல் மின்நிலையம். (கோப்பு படம்).

தூத்துக்குடியில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு சொந்தமான அனல் மின் நிலையத்தில் 420 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி துறைமுக சாலையில் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு சொந்தமான அனல் மின் நிலையம் உள்ளது. 35 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த அனல் மின்நிலையத்தில் தலை 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட மொத்தம் ஐந்து யூனிட்டுகள் உள்ளன. இதன் மூலம் தினமும் 1050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

நிலக்கரி தட்டுப்பாடு, கொதிகலன் பழுது, கண்வேயர் பெல்ட் பழுது உள்ளிட்டவை காரணமாக அடிக்கடி இங்கு மின்சார உற்பத்தி பாதிக்கப்படுவது உண்டு. மேலும், முறையான பராமரிப்பு இல்லாததால் அடிக்கடி பழுது ஏற்பட்டு மின் உற்பத்தி பாதிக்கப்படும் சூழ்நிலையும், விபத்து ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த நிலையில் இரண்டாவது அலகு பராமரிப்பு பணிக்காக கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டு பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, ஐந்தாவது அலகில் கொதிகலன் பழுது காரணமாக மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சுமார் 420 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

அனல் மின் நிலையத்தில் முறையாக பராமரிப்பு நடைபெறாததால் சில விபத்துக்கள் நடைபெற்று வரும் நிலையில் தற்போது மூன்றாவது அலகில் புகை போக்கியில் கம்பி ஒன்று கீழே விழுந்து விபத்து ஏற்படுத்தக் கூடிய வகையில் தொங்கிக் கொண்டிருப்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

எனவே, அனல் மின்நிலைய நிர்வாகம் உடனடியாக இதில் கவனம் செலுத்தி காற்று பலமாக வீசி வரும் நிலையில் அந்த புகை போக்கியில் அபாயகரமான வகையில் தொங்கிக்கொண்டு இருக்கும் கம்பியை சரி செய்ய வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!