தூத்துக்குடி மாவட்டத்தில் ஊர்க்காவல் படையினர் 32 பேருக்கு பதவி உயர்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊர்க்காவல் படையினர் 32 பேருக்கு பதவி உயர்வு
X

தூத்துக்குடியில் நடைபெற்ற தேர்வில் பங்கேற்ற ஊர்க்காவல் படையினர்.

தூத்துக்குடி மாவட்ட ஊர்காவல் படையில் பணிபுரியும் 32 வீரர்களுக்கு பதவி உயர்வு வழங்கி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்ட ஊர்க்காவல் படையில் 330 படை வீரர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், ஊர்க்காவல் படையினருக்கு கடந்த 2010 ஆம் ஆண்டு பதவி உயர்வு அளிக்கப்பட்டது. அதன்பின்பு இதுவரை பதவி உயர்வு வழங்கபடாத நிலை நீடித்தது.

இதைத்தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ஊர்க்காவல் படையினருக்கு பதவி உயர்வு அளிக்க தூத்துக்குடி மாவட்ட தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில், மாவட்ட ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் புருஷோத்தமன் மற்றும் ஊர்க்காவல் படை வட்டார தளவாய் பாலமுருகன் ஆகியோர் அடங்கிய குழு அமைத்து தகுதியான வீரர்களை தேர்வு செய்ய உத்தவிட்டார்.

காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில், தேர்வுக் குழுவினர் மதிப்பெண்கள் அடிப்படையில் பல வருடங்களாக தன்னார்வ தொண்டாக கருதி பணிபுரியும் தகுதியான 32 வீரர்களை தேர்வு செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அறிக்கை செய்தனர்.

இதையெடுத்து, தேர்வு செய்யப்பட்டவர்களில் படைப்பிரிவு தளபதி (PC) ராமகிருஷ்ணன் படை தளபதியாகவும் (CC), துணை படைப்பிரிவு தளபதி (APC) உலகம்மாள் படைப்பிரிவு தளபதியாகவும் (PC), குழு தலைவர்களான (SL) செல்வ போதகர் மற்றும் பிரின்ஸ் கிரிஸ்டியா ஆகியோர் துணை படைப்பிரிவு தளபதிகளாகவும் (APC) பதவி உயர்வு பெற்றனர்.

மேலும், உதவி குழு தலைவர்களான (ASL) கைலாஷ் குமார், வெங்கடாச்சலம் மற்றும் ஆறுமுகசிவம் ஆகியோர் குழு தலைவர்களாகவும் (SL), ஊர்க்காவல் படைவீரர்களான (HG) ஜெபராஜ் கிரிஸ்டோ டேவிட், சிவஞானம், மகேஷ்குமார், ஆனந்த், அருள், சிவகுமார், மாரிசங்கர், சிவசங்கர், ஜெயா, சரிதா, செல்வஈஸ்வரி, மாரியப்பன், பால் சாமுவேல், ஜெபராஜ்ராஜன் பொன்னையா, காசி பாலன், செல்வகுமார், பொன்னம்பலம், அருண்சங்கர், செல்லதுரை, தவமணி, சிவக்குமார், அய்யப்பராஜ், பாலாஜி, கணேசன் மற்றும் வேலுமணி ஆகியோர் உதவி குழு தலைவர்களாகவும் (ASL) பதவி உயர்வு பெற்றனர். இதற்கான உத்தரவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் இன்று பிறப்பித்து உள்ளார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!