தூத்துக்குடியில் 32 ஏக்கரில் பல்லுயிர் பூங்கா: ஸ்டெர்லைட் நிறுவனம்
தூத்துக்குடியில் நடைபெற்ற முத்துநகர் பல்லுயிர் பூங்கா திட்ட தொடக்க விழாவில் பங்கேற்றோர்.
தாமிர உற்பத்தியில் முன்னணியில் விளங்கி வரும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் ஆலை சர்வதேச பல்லுயிர் பெருக்க தினத்தை முன்னிட்டும், அதன் 2023 ஆம் ஆண்டிற்கான நோக்கமாக ‘’ பல்லுயிர் பெருக்கத்தை மீண்டும் உருவாக்குதல்’’ என்ற சர்வதேச இலக்கை மெய்ப்பிக்கும் வகையில் ‘’ முத்துநகர் பல்லுயிர் பூங்கா” என்ற திட்டத்தை தொடங்கி உள்ளது.
இதற்கான அடிக்கல் நாட்டு விழா தூத்துக்குடியில் நடைபெற்றது. அடிக்கல் நாட்டும் விழாவிற்கு தமிழ்நாட்டின் காடுகளின் மனிதர் என்று அழைக்கப்படும் சரவணன் தலைமை தாங்கினார். இவர் ஏற்கனவே புதுச்சேரிக்கு அருகில் 100 ஏக்கர் தரிசு நிலத்தை காடுகளாக மாற்றி பல்வேறு வகையான தாவரங்கள் மற்றும் விலங்குகளின் சரணாலயமாக மாற்றி உள்ளார் என்பது குறுப்பிடத்தக்கது.
மேலும் இந்த நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி தெற்கு சிலுக்கன்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பாலசுப்ரமணியன் மற்றும் சாமிநத்தம் பஞ்சாயத்தை சேர்ந்த ல்லதம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த திட்டத்தின் முதற்கட்டமாக தமிழ் சங்க இலக்கியங்களில் குறிப்படப்பட்டிருக்கும் தாவரங்களை மீட்டெடுத்து ஒரு பூங்காவை உருவாக்குவது என திட்டமிடப்பட்டு உள்ளது.
மேலும், தமிழ்நாட்டில் முதன் முறையாக ஐந்திணைப் பூங்கா (குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் மற்றும் பாலை) நிறுவப்பட உள்ளது. புவி வெப்பமயமாதலை தடுக்கும் டை-மெத்தில்-சல்பைடு என்ற ரசாயனத்தை காற்றில் கலக்கும் பெரிய இலை மகோகனி மரங்களை நடுதல் முதற்கட்ட திட்டமாகும்.
அடுத்தகட்டமாக மூலிகைத் தோட்டம், அரிய வகை தாவரங்களை மீட்டெடுத்தல், நட்சத்திர வனம், மூங்கில் தோட்டம் மற்றும் இன்னும் பிற தனித்துவமான பல்லுயிர் பெருக்கத்தை மேம்படுத்த உள்ளது. நிகழ்ச்சியின்போது, ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்களிடம் காடுகள் மற்றும் பல்லுயிர் பெருக்கத்தின் அவசியம் குறித்து சரவணன் பேசினார்.
தொடர்ந்து, ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுமதி பேசியதாவது:
’’இந்த பல்லுயிர் பூங்கா தூத்துக்குடி மற்றும் தமிழ்நாட்டின் பெருமையாக விளங்கும். இந்த ஆலை ஆரம்பித்த நாள் முதல் திருவைகுண்டம் பகுதிகளில் காலவாய்களை புணரமைத்தல், கிராமப்புறங்களில் உள்ள குளங்களைத் தூர்வாறுதல் போன்ற பணிகளின் மூலம் மக்களின் வாழ்வாதாரத்திற்கும் பல்லுயிர் பெருக்கத்திற்கும் சேவை செய்து வருகிறது.
மேலும், பசுமை தூத்துக்குடி என்ற திட்டம் 2019 ஆம் ஆண்டு 10 லட்சம் மரங்கள் நடும் திட்டத்தை முன்னெடுத்து 1.25 லட்சத்தை இதுவரை அடைந்துள்ளது. இந்த பத்து லட்சம் மரத்தை 4000 ஏக்கர் நிலத்தில் நடுவதன் மூலம் தூத்துக்குடி மாவட்டத்தின் காடுகளின் பரப்பளவு 5.25 சதவீதத்தில் இருந்து 14.0 சதவீதமாக வளர்ச்சி அடையும்.
ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனமானது தூத்துக்குடியில் உள்ள 403 கிராம பஞ்சாயத்துகளில் 35 சதவீத காடுகளை உருவாக்க தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், கிராமப் பஞ்சாயத்து அமைப்புகள் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தை 8870477985 என்ற தொலைபேசி எண்ணிலும், Sterlite.communication@vedanta.co.in என்ற மின்னஞ்சல் முகவரியும் தொடர்பு கொள்ளலாம் என சுமதி தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu