தூத்துக்குடியில் காவலாளியை மிரட்டி 3 டன் முந்திரி மூட்டைகள் கடத்தல்

தூத்துக்குடியில் காவலாளியை மிரட்டி 3 டன் முந்திரி மூட்டைகள் கடத்தல்
X

முந்திரிபருப்பு மூட்டைகள் மற்றும் கொள்ளையடித்து செல்ல பயன்படுத்திய சரக்கு வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடியில் தனியார் ஏற்றுமதி நிறுவன குடோனில் காவலாளியை மிரட்டி 3 டன் முந்திரிபருப்பு மூட்டைகள் கொள்ளையடிக்கப்பட்டது.

தூத்துக்குடி பால்பாண்டிநகரை சேர்ந்த பால்ராஜ் (48) என்பவர் முந்திரிபருப்புகளை வாங்கி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். மேலும், இவர் முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருச்செந்தூர்- தூத்துக்குடி சாலை பகுதியிலுள்ள ஒரு குடோனை வாடகைக்கு எடுத்து அதில் முந்திரிபருப்பு மூட்டைகளை ஏற்றுமதி செய்வதற்காக வைத்திருந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 07.08.2023 அன்று இரவு அந்த குடோனிற்கு இருசக்கர வாகனம் மற்றும் சரக்கு வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் அங்கு இருந்த வாட்ச்மேனை கத்தியை காட்டி மிரட்டி குடோன் ஷட்டரின் பூட்டை உடைத்து அங்கு இருந்த 40 முந்திரிபருப்பு மூட்டைகளை சரக்கு வாகனத்தில் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுகுறித்து பால்ராஜ் அளித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின்படி, தூத்துக்குடி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சத்தியராஜ் மேற்பார்வையில், தெர்மல்நகர் காவல் நிலைய தலைமை காவலர் மாணிக்கராஜ் தலைமையில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், தூத்துக்குடி பெரியசாமிநகர் பாலம் பகுதியை சேர்ந்தவர்களான அழகர் (27), மணிகண்டன் (32), மாரிமுத்து (20), தூத்துக்குடி பிரையண்ட்நகரை சேர்ந்த சுரேஷ் (20) மற்றும் முத்தையாபுரம் சுந்தர்நகரை சேர்ந்த அஜித்குமார் (26) ஆகியோர் குடோனில் காவலாளியை கத்தியை காட்டி மிரட்டி முந்திரிபருப்பு மூட்டைகளை சரக்கு வாகனத்தில் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

உடனே மேற்படி தனிப்படை போலீசார் அழகர், மணிகண்டன், சுரேஷ், அஜித்குமார் மற்றும் மாரிமுத்து ஆகிய 5 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து கொள்ளையடித்து சென்ற ரூபாய் 3,20,000 மதிப்புள்ள 3 டன் 200 கிலோ முந்திரிபருப்பு மூட்டைகள் மற்றும் கொள்ளையடித்து செல்ல பயன்படுத்திய சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து முத்தையாபுரம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கொள்ளையர்களை விரைந்து கைது செய்து 3 டன் முந்திரிபருப்பு மூட்டைகளை மீட்ட தூத்துக்குடி உட்கோட்ட தனிப்படை போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பாராட்டு தெரிவித்தார்.

Tags

Next Story
why is ai important to the future