பிப்.27-ல் மாவட்ட ஹாக்கி லீக் போட்டிகள் துவக்கம்

பிப்.27-ல் மாவட்ட ஹாக்கி லீக் போட்டிகள் துவக்கம்
X

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தூத்துக்குடி மாவட்டப் பிரிவு சார்பில் மாவட்ட அளவிலான ஹாக்கி லீக் போட்டிகள் 27.02.2021 மற்றும் 28.02.2021 ஆகிய நாட்களில் கோவில்பட்டி, செயற்கை இழை ஹாக்கி மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்த ஹாக்கி லீக் போட்டிகளில் கலந்து கொள்ள வயது வரம்பு, நுழைவு கட்டணம் கிடையாது. இப்போட்டிகள் ஆண்களுக்கு மட்டுமே நடத்தப்படுகிறது. இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ள ஹாக்கி அணிகள் தங்கள் அணியில் விளையாடும் வீரர்களின் பெயர்ப்பட்டியல், முகவரி மற்றும் அலைபேசி எண்ணுடன் 26.02.2021 மதியம் 2.00 மணிக்குள் ஹாக்கி பயிற்றுநர் என்.முத்துக்குமார், அலைபேசி எண் 9994641614 என்பவருக்கு தெரிவிக்கலாம்.

இப்போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்படும். இந்த மாவட்ட அளவிலான போட்டிகளில் முதலிடம் பெறும் அணியானது மண்டல அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளிலும், மண்டல அளவில் முதல் இரண்டு இடங்களை பெறும் அணிகள் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளிலும் அரசு செலவில் கலந்து கொள்ளலாம். என மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் டி.வி.பேட்ரிக் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!