தூத்துக்குடி மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட 12 ஆயிரம் பேர் மீட்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட 12 ஆயிரம் பேர் மீட்பு
X

மழையால் பாதிக்கப்பட்ட மறவன்மடம் பகுதி மக்களிடம் முதல்வர் ஸ்டாலின் குறைகளை கேட்டறிந்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம், ஏரல் உள்ளிட்ட பகுதிகளில் மழையால் பாதிக்கப் பட்ட 12,000 பேர் மீட்கப்பட்டுள்ளனர்

தூத்துக்குடி மாவட்டத்தில் டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெய்த அதிகனமழையின் காரணமாக ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளப் பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின்படி, வெள்ள பாதிப்புகளை சீர் செய்திடவும், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளவும் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு, அவர்களுடன் இணைந்து நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கண்காணிப்பு அலுவலர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பணி மேற்கொண்டு வருகின்றனர்.

கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மாவட்டத்திற்கு கூடுதலாக அமைச்சர்கள் மற்றும் இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்பேரில் நியமிக்கப்பட்டுஇ அவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து மீட்புப் பணிகளை மேற்கொள்ளுதல்இ பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்குதல்இ மக்களுக்கு வேண்டிய மருத்துவ உதவிகளை வழங்குதல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கனமழையால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை முதல்வர் ஸ்டாலின் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். தூத்துக்குடி மறவன் மடம் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து, வெள்ள சேத விவரங்களையும், அவர்களது கோரிக்கைகளையும் கேட்டறிந்த முதல்வர் ஸ்டாலின் அவர்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார். அப்போது, பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் உரிய நிவாரண உதவிகள் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, மறவன் மடம் பகுதியில் வெள்ளத்தால் சேதமடைந்த பாலத்தை சீரமைக்கும் பணிகளை பார்வையிட்டார்.

மேலும், செயின்ட் மேரிஸ் பள்ளியில் உள்ள நிவாரண மையத்திற்கு சென்ற முதல்வர் ஸ்டாலின், அங்கு தங்க வைக்கப்பட்டுள்ள மக்களிடம் அவர்களுக்கு செய்து தரப்பட்டுள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்தார். முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு அரிசி, வேஷ்டி, சேலை, போர்வை, பாய், பிஸ்கட் மற்றும் ரொட்டி, பால் பவுடர், தண்ணீர் பாட்டில் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து, எட்டையபுரம் 3 -ஆவது ரயில்வே கேட் மேம்பாலத்தில் இருந்து வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின், வெள்ள நீரை அகற்றிட துரித நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின்னர், குறிஞ்சி நகர், போல்பேட்டை பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்த முதல்வர், பொதுமக்களிடம் பாதிப்புகளின் விவரங்கள் குறித்து கேட்டதார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் 150 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு மழை பெய்து உள்ளதாகவும், மாவட்டத்தில், ஸ்ரீவைகுண்டம், ஏரல் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், மழையால் பாதிக்கப்பட்ட 12,000 பேர் மீட்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர் என்றும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 6000 வழங்கப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
ai solutions for small business